மே மாதத்தில் 12.43 லட்சம் பேர் தலைமுடி காணிக்கை: திருப்பதி தேவஸ்தானம் சாதனை

மே மாதத்தில் 12.43 லட்சம் பேர் தலைமுடி காணிக்கை: திருப்பதி தேவஸ்தானம் சாதனை
Updated on
1 min read

திருமலை: திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில், நேர்த்​திக்​கடனாக பக்​தர்​கள் தலை​முடி காணிக்கை செலுத்​து​வது வழக்​கம். இதனை 3 மாதங்​களுக்கு ஒரு​முறை க்ளோபல் டெண்​டர் மூலம் ஆன்​லைனில் தேவஸ்​தானம் விற்​பனை செய்து வரு​கிறது.

இது பல கோடி ரூபாய்க்கு வாங்​கப்​படு​கிறது. இதனால் இதனை ‘கருப்​புத் ​தங்​கம்’ என்​றும் அழைக்​கின்​றனர். இந்​நிலை​யில், கடந்த மே மாதம் கோடை விடு​முறை என்​ப​தால் பக்​தர்​களின் கூட்​டம் அதி​க​மாக இருந்​தது.

சர்வ தரிசனம் மூலம் சுமார் 5 கி.மீ. தொலைவு வரை காத்​திருந்​து, 30 மணி நேரத்​துக்​கும் அதி​க​மாக வரிசை​யில் நின்று சுவாமியை பக்​தர்​கள் தரிசித்​தனர். இதனால் தினசரி உண்​டியல் காணிக்​கை​யும் ரூ.4 கோடிக்கு மேல் அதிகரித்தது.

இதுபோல கடந்த மே 1ம் தேதி முதல் 27ம் தேதி வரை மட்​டும் 12,43,063 பக்​தர்​கள் தலை​முடி காணிக்கை செலுத்தி உள்​ளனர். இது ஒரு சாதனை​யாக கருதப்​படு​கிறது. ஏனெனில் கடந்த 2024ம் ஆண்டு மே மாதத்​தில் 10.65 லட்​சம் பேரும், 2025 மே மாதத்​தில் 10.28 லட்​சம் பேரும் தலை​முடி காணிக்கை செலுத்தி இருந்​தனர். இதில் 269 பெண்கள் உட்பட 1,150 நா​விதர்​கள் பணி​யாற்​றினர்.

மே மாதத்தில் 12.43 லட்சம் பேர் தலைமுடி காணிக்கை: திருப்பதி தேவஸ்தானம் சாதனை
MAI: கடந்து போகும் காதலில் ‘மய்’ பகிரும் பிரேக்-அப் பாடம் | திரை தேவதைகள் 19

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in