Last Updated : 26 Apr, 2018 10:09 AM

 

Published : 26 Apr 2018 10:09 AM
Last Updated : 26 Apr 2018 10:09 AM

திராவிடக் கலைக் குகைக் கோயில்கள்

இது கோடைக் காலம். சுற்றுலா செல்ல பலரும் விரும்புவார்கள். கோயிலுடன் கூடிய சுற்றுலா நகரங்களுக்குச் செல்லவும் பலரும் விரும்புவதுண்டு. அப்படிப் போக விரும்பினால், கர்நாடக கோயில்களுக்குச் செல்லலாம். கர்நாடகாவில் குகைகளுடன்கூடிய கோயில்கள் அதிகம்.

பாதாமி, பட்டாடக்கல்லு, அய்ஹோலே போன்ற ஊர்களில் உள்ள கோயில்கள் மிகவும் சிறப்பு வாந்தவை. குறிப்பாக, பாதாமி கோயில்களைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும். கோயில் அமைந்திருக்கும் இடமும் சுற்றுச்சூழலும் அத்தனை ரம்மியமாக இருக்கும். இரு செங்குத்தான மலைச்சரிவுகளுக்கு இடையே அமைந்த பள்ளத்தாக்கின் இறுதிப் பகுதியில்தான் பாதாமி நகரமும் குகைக் கோயில்களும் அமைந்துள்ளன.

பாதாமியில் அமைந்துள்ள குகைக் கோயில்கள் சாளுக்கிய மன்னன், புலிகேசி ஆகியோர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை. கி.பி. 5 முதல் 8-ம் நூற்றாண்டுகளில் வம்சாவளியாகக் கட்டப்பட்ட கோயில்கள். திராவிட கலை நுட்பத்துடன் இந்தக் குகைக் கோயில்கள் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. பாதாமி என்ற சிறு நகரம் முழுக்க முழுக்க பாதாம் நிறத்தில் காணப்படுகிறது. கரடுமுரடான பாறைகள் நிறைந்திருப்பதால் இந்த ஊருக்கு பாதாமி என்று பெயர் வந்தது. பதாமி என்றும் கூறுகிறார்கள்.

நான்கு குகைக் கோயில்கள்

இங்கே உள்ள குகைக் கோயில் சிற்பங்கள் கி.பி.543-ம் ஆண்டு பாதாமியை தலைநகரமாக சாளுக்கிய மன்னர் மாற்றியபோது அமைத்தவை. தென்னகத்திலிருந்த படை எடுத்து வந்த பல்லவ நாட்டு மன்னர்களிடமிருந்து காத்துக்கொள்வதற்காக அமைக்கப்பட்டது இக்கோயில் என்று வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன. மிகப் பெரிய மலையைக் குடைந்து சிற்பங்களை இங்கே அமைத்திருக்கிறார்கள். இங்கே இருக்கும் சிற்பங்கள், தூண்கள், குடைவரைக் கோயில்கள் ஆகியவை கொள்ளை அழகு. மொத்தம் 4 குகைக் கோயில்கள் அருகருகே இருக்கின்றன. ஒவ்வொரு சிற்பமும் கலை அம்சத்துடன் மிகவும் நுணுக்கமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் உள்ள அகஸ்தியர் தீர்த்தக் குளமும், அதில் அமைந்துள்ள பழங்கால புத்தநாதர் கோயிலும் அத்தனை அழகாக அமைக்கப்பட்டிருக்கின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இடத்துக்குச் சென்றால் சுற்றுலா சென்றதுபோலவும் இருக்கும். பழங்காலக் குகைக் கோயில், சிற்பங்கள் மற்றும் கடவுளைத் தரிசித்துவிட்டு வந்ததுபோலவும் இருக்கும்.

எப்படிப் போக வேண்டும்?

கர்நாடகாவின் இரட்டை நகரங்களான ஹூப்ளி-தார்வாடிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் இவை உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x