Published : 19 Feb 2024 12:55 PM
Last Updated : 19 Feb 2024 12:55 PM

கும்பகோணத்தில் இருந்து நவக்கிரஹ கோயில்களுக்கு சிறப்பு அரசு பேருந்து சேவை பிப்.24-ல் தொடக்கம்

பிரதிநிதித்துவப் படம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் இருந்து நவக்கிரஹ கோயில்களுக்கு பிப்.24-ம் தேதியில் இருந்து செல்லும் அரசு பேருந்தில் கூடுதல் சிறப்பு வசதிகளுடன் இயக்குவதற்காக கரூரில் பிரத்யோகமாக வடிவமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.

கும்பகோணத்திலிருந்து 9 நவக்கிரக கோயில்களுக்கு பிப்.24-ம் தேதியிலிருந்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்து இயக்கப்பட உள்ளது. இதற்கு பயணக் கட்டணமாக ஒருவருக்கு ரூ. 750 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான தொடக்க விழா பிப்.24-ம் தேதி காலை கும்பகோணம் பேருந்து நிலையத்தில் நடைபெறுகிறது. இந்த சேவையை மாநில போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைக்கிறார்.

கோயில்களுக்கு செல்லும் பயணிகள் சவுகரியமாக செல்ல வேண்டும் என பேருந்தில் கூடுதல் சிறப்பு வசதிகள் மேற்கொள்ள அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, கரூரில உள்ள அரசு போக்குவரத்துக் கழக பேருந்து கூடு கட்டும் பிரிவு பணிமனையில் கூடுதல் வசதியுடன் வடிவமைக்கப்படும் (பேருந்து எண் டிஎன்68 என்-0738),

சிறப்புப் பேருந்தில் பயணிகள் தங்களது செல்போன்களில் சார்ஜ் செய்யக் கொள்ள எதுவாக ஓட்டுநர் இருக்கை அருகில் 3 எண்ணிக்கையிலான சார்ஜர் சாக்கேட், பயணிகள் குடிநீர் பாட்டில் வைப்பதற்கு அனைத்து இருக்கையிலும் அதற்குரிய வசதிகள், முன்பதிவு செய்து கொண்ட பயணிகள் தங்கள் இருக்கைகளை கண்டறியும் வகையில் ஒவ்வொரு இருக்கைக்கு எண்கள் எழுதப்படவுள்ளன.

மேலும், பேருந்து உட்புறம் அனைத்து இருக்கை ஜன்னல்களிலும் ஸ்கிரீன் வசதி, சுற்றுலாத் துறை மூலம் தனியார் வழிகாட்டி. மேலும், வழிகாட்டி மூலம் பயணிகளுக்கு கோயில்களின் தலவரலாறுகளை அறியும் வகையில் மைக் உடன் கூறிய ஸ்பீக்கர் பொருத்தப்பட உள்ளது. இதேபோல் பயணிகள் வசதிக்காக கடிகாரம், பயணிகளின் உடமைகள் பாதுகாப்பு கருதி முன் பக்கம் கதவு உள்ளிட்டவை பொருத்தப்பட உள்ளதாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x