Published : 25 Jan 2018 11:31 AM
Last Updated : 25 Jan 2018 11:31 AM

ராமாயணம் 61 மந்திரங்கள்

காமாக்‌ஷி அம்மையார் என்பவர் திருவிடைமருதூருக்கு மிக அருகில் உள்ள கோவிந்தபுரத்தில் ‘தபோவனம்’ என்று மஹா ஸ்சுவாமிகளுக்குக் கோயில் ஒன்றைக் கட்டியுள்ளார். அதில் இதுவரையான பீடாதிபதிகளின் படங்களோடு சிவலிங்கங்களும் அமைத்து மூலஸ்தானத்தில் மகா பெரியவர் கைகூப்பிய வண்ணம் அழகிய திருமேனியும் அமைத்து பூஜித்து வருகிறார்.

மகா பெரியவரின் வாக்காகவும் சில விஷயங்களை வெளிப்படுத்துகிறார். உபன்யாசகர் சேங்காலிபுரம் அனந்தராமதீக்ஷிதருக்கு மகா பெரியவர் சுருக்க வடிவில் ராமாயணம் ஒன்றை அருளியதையும் சமீபத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்தச் சுருக்கமான ராமாயண வடிவத்தை (61 வரிகள்) மந்திரம்போல் படித்தால் முழுமையான ராமாயண காவியத்தைப் படித்த பலன் உண்டாகும் என்றும் இன்றைய சூழ்நிலையில் நாட்டுக்கு சுபிட்சம் ஏற்படுத்தும் என்றும் அருளியுள்ளார். ‘தபோவனம்’ திருத்தலத்தில் இந்தச் சுருக்கமான ராமாயண வடிவம் மந்திரமாகத் தினமும் பாராயணம் செய்யப்படுகிறது. இந்தச் சுருக்கமான ராமாயண காவியத்தைத் தினமும் படித்தால் ஸ்ரீஇராமபிரானின் அருளும் ஸ்ரீகாஞ்சி மஹாஸ்வாமிகளின் அருளும் ஒருங்கே கிடைக்கப்பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

1. க்ரெளஞ்ச பட்சி மோட்சம்

2. வால்மீகி பிரவேசம்

3. நாரதர் விஜயம்

4. ஸ்ரீசீதா காவ்யம்

5.ஸ்ரீராம கதா ஆரம்பம்

6. லவகுச கீர்த்தனம்

7. தசரத புத்ர சோகம்

8. குலகுரு வசிஷ்டர் அனுக்கிரஹம்

9. அஸ்வமேத யாகம்

10. ஸ்ரீராம லெஷ்மண சத்ருக்ண ஜனனம்

11.விஸ்வாமித்ர விஜயம்

12.அகல்யா சாபவிமோசனம்

13.வேள்வி காத்தல்

14. தாடகை மரணம்

15. மிதுலாபுரி விஜயம்

16. சீதா சுயம்வரம்

17. சிவதனுசு காவ்யம்

18. ஸ்ரீராமவீரம்

19. ஸ்ரீசீதாராம கல்யாணம்

20. பரசுராம விஜயம்

21. விஷ்ணு தனுசு ப்ரயோகம்

22. அயோத்தி விஜயம்

23. ஸ்ரீராமபட்டாபிஷேகம் ஆரம்பம்

24. கைகேயி வரம்

25. சீதா ராம வனவாசம்

26. குகன் பரிச்சியம்

27. சூர்ப்பனகை வதம்

28. மாரீசன் மரணம்

29. சித்ர கூட விஜயம்

30. இராவண விஜயம்

31.சீதா தேவியைத் தேடும் படலம்

32. ஜடாயு மோட்சம்

33. கந்தமா பர்வத விஜயம்

34. மாருதி விஜயம்

35. சுக்ரீவனுக்கு அபயம்

36. மராமரம் துளைத்தல்

37. வாலி மரணம்

38. சுக்ரீவனுக்கு பட்டாபிஷேகம்

39. சேது பயணம்

40. தர்பசயனம்

41. சமுத்ர ராஜன் சரணாகதி

42. சேதுபாலம்

43. மாருதி இலங்கை பயணம்

44. விபீஷணன் சந்திப்பு

45. சீதா தரிசனம்

46. கணையாழி காவ்யம்

47. லங்கா தகனம்

48. விபீஷண பட்டாபிஷேகம்

49. சேதுபால பயணம்

50. இந்திரஜித் லெஷ்மண யுத்தம்

51. இந்திரஜித் மரணம்

52. ஸ்ரீராம ராவண யுத்தம்

53. சீதா அக்னி பிரவேசம்

54. புஷ்பக விமானம்

55. பரத்வாஜ ஆஸ்ரம விஜயம்

56. பரத மாருதி ஆலிங்கனம்

57. சீதாராம அயோத்தி விஜயம்

58. குலகுரு வசிஷ்டர் ஸப்தரிஷிகள்

59. பல முனிவர்கள் ஆசியுடன்

60. குலமாதர்கள் ஆசியுடன்

61. சீதாராம பட்டாபிஷேகம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x