Published : 14 Dec 2017 12:16 PM
Last Updated : 14 Dec 2017 12:16 PM

திருநள்ளாறு... திருக்கொள்ளிக்காடு... திருநரையூர்...

ளன் சாபம் நீங்கப்பெற்ற திருநள்ளாறு, பொங்கு சனீஸ்வரராக அருள்பாலிக்கும் திருக்கொள்ளிக்காடு, மங்கள சனீஸ்வரராக குடும்பத்துடன் அருள்பாலிக்கும் திருநறையூர் ஆகிய திருத்தலங்கள் முறையே காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளன.

02_thirunallaru

சிறப்பு வாய்ந்த திருநள்ளாறு

திருநள்ளாறு கோயிலின் தீர்த்தங்கள் ஆறு. அவைகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது நளதீர்த்தம். குளக்கரையில் வினை தீர்த்த விநாயகர். நளன் இவரை தரிசித்து விட்டுதான் பிரதான கோயிலுக்குச் சென்றாராம். சோழர் கால கோயிலாகிய இங்கு நாயன்மார்கள் வழிபட்டுள்ளனர். ஐந்தடுக்கு ராஜ கோபுரம் உள்ளது.

மூலவர் சன்னதிக்கு வடக்கு திசையில் சனீஸ்வரர் கோயில். சிறிய விக்கிரகம், கருப்பு ஆடையில் உள்ளது. தங்கக் காகத்தின் மீது சனீஸ்வர பகவான் எழுந்தருளியுள்ளார். வலது கையில் ஒரு வாள் இருக்க, இடது கை உயர்ந்து அருள் பாலிக்கும் நிலையில் உள்ளது. அதனால்தான் இவர் இங்கு அனுக்ரஹ மூர்த்தி.

பிரசாதத்தை எடுத்துச் செல்லலாம். சனி பகவான் நிறைய முடியுள்ளவராகவும், ஒல்லியான கரிய நிறம் படைத்தவராகவும் விவரிக்கப்படுகிறார்.

சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அருகிலுள்ள கோயிலில் வழிபட வேண்டும். நள தீர்த்தம் ஸ்நானம் அவசியம் (தண்ணீரைத் தலையில் தெளித்துக் கொள்ளவாவது வேண்டும்). சனிக்கிழமை தரிசனம் சிறப்பு வாய்ந்தது. ஆனால், அன்று நீண்ட வரிசையில் நிற்க வேண்டி வரும்.

காணிக்கையாக பக்தர்கள் கருப்புத் துணி, எள் விதை, கருமையான குவளை மலர்கள், நீலக்கல் போன்றவற்றை அளிக்கிறார்கள். வாழ்வில் ஒரு முறையாவது திருநள்ளாறு வந்து தரிசனம் செய்து வழிபடுவதுடன் எள் சாதத்தைத் தானமாகக் கொடுப்பது நல்லது.

திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர்

நள மகாராஜன், சனி தோஷம் நீங்கப் பெற்ற தலம் இது. தனது நாடு, இழந்த அனைத்து செல்வங்கள் மற்றும் புகழ் என அனைத்தையும் பெற நளன் இத்தலத்தில் வழிபட்டதாகவும், அதன் பின்னர், இழந்த அனைத்தையும் பெற்றதாகவும் வரலாறு. சூரிய பகவானுக்கும் அவரது மனைவி சயாவுக்கும் கடும் தவத்தால் மகனாகப் பிறந்தவர் சனி. தவத்தால் பிறந்த மகனாதலால் சிறு வயதிலேயே பாவச்செயல்களைச் செய்பவர்களை தண்டிக்கும் பணியை சனிபகவான் மேற்கொள்ள பணிக்கப்பட்டார். அதனால் அனைவரும் சனியின் பெயரைக் கேட்டாலே அஞ்சி நடுங்கினார்கள். இதில் விரக்தியடைந்த சனி பகவான் இந்தத் தலத்தில் தவமிருந்துதான் சனீஸ்வர பட்டம் பெற்றார் என்பது புராண வரலாறு.

இத்தலத்தில் பொங்கு சனியாக எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவான், ஏர்கலப்பையும், காகத்தையும் கையிலேந்தி காட்சியளிக்கிறார். பொங்கு சனியை வழிபடுவோருக்கு செல்வத்தை வாரி வழங்கக்கூடிய வல்லமை பெற்றவராக இந்தத்தலத்தில் பொங்கு சனீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். மேலும் சனீஸ்வரனின் குருவான பைரவர், சனிபகவானின் பார்வையின் சீற்றத்தை கட்டுப்படுத்துபவராக நேர் எதிரில் காட்சி தருகின்றார்.

இத்தலத்துக்கு மேலும் ஒரு சிறப்பாக ப என்ற வடிவத்தில் நவக்கிரகங்கள் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தவாறு எழுந்தருளியிருப்பதால் இத்தலத்துக்கு வருவோருக்கு சனி மட்டுமல்லாத வேறு எந்த கிரகங்களும் தீமை செய்யாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சாதாரணமாக ஏழரைச்சனி காலத்தில் சனீஸ்வரனின் பார்வையின் சீற்றத்தை குறைக்க வேண்டுமென்றால் பொங்கு சனியை வழிபட வேண்டும் என ஜோதிட வல்லநர்கள் இன்றளவும் கூறி வருகின்றனர். அந்த வகையில் பொங்கு சனீஸ்வரனை வழிபடுவோருக்கு உத்யோகம், நன்மக்கட்பேறு, தொழில் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், திருமணத் தடை நீக்கம், கடன் தொல்லை தீருதல் போன்ற பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

04_thirunaraiyur managala saniswaranright

திருநரையூர் மங்கள சனீஸ்வரன்

கும்பகோணம் அருகிலுள்ள திருநரையூர் கிராமத்தில் இருக்கும் சனீஸ்வரர், தன் குடும்பத்துடன், அனுக்கிரக சனியாக அருள்பாலிக்கிறார். இவருக்கு ஆகமவிதிப்படி கொடி மரம் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தூரத்தில் உள்ள நாச்சியார்கோவில் அருகிலேயே திருநரையூர் உள்ளது. இவ்வூரில் உள்ள ராமநாத சுவாமி கோயிலில், மூலவருக்கு பலி பீடமோ, கொடி மரமோ கிடையாது.

ஆனால், சனீஸ்வரருக்கு தனி சன்னிதியுடன், பலி பீடமும், கொடி மரமும் உண்டு. சிவன் சன்னதி முன் நந்தி இருப்பதுபோல், சனீஸ்வரர் சன்னிதி முன், காக வாகனம் இருக்கிறது. தமிழக தென் மாவட்டங்கள் மற்றும் கேரள மக்கள் ஜாதகம் எழுதும்போது, மாந்திக்கு முக்கியத்துவம் தருவர்.

மாந்தி தோஷம் உள்ளோர், இங்கு வந்து மாந்திக்கு அர்ச்சனை செய்து, நிவாரணம் பெறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x