Last Updated : 01 Nov, 2017 07:33 PM

 

Published : 01 Nov 2017 07:33 PM
Last Updated : 01 Nov 2017 07:33 PM

ஸ்ரீரங்கத்துக்கு யுனெஸ்கோ விருது: அரங்கனின் பக்தர்கள் பெருமிதம்!

காவிரிக்கரைக்கும் கொள்ளிடக் கரைக்கும் நடுவே அமைந்து உள்ள அற்புதமான வைஷ்ணவத் தலம் ஸ்ரீரங்கம். 108 வைணவ திவ்விய தேசங்களில், முக்கியமான தலம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் திருக்கோயிலுக்கு, கடந்த வருடத்தில் இரண்டு கட்டமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஆலயத்தின் தூய்மை, பிரமாண்டம், புராண - புராதனப் பெருமை, மிகச் சிறந்த கட்டுமான அமைப்பு என பல வகைகளிலும் இன்றைக்கும் நம் மனதில் கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் ஆலயம், ஸ்ரீரங்கம் தலத்துக்கு இன்னொரு பெருமையும் சேர்ந்திருக்கிறது.

தூய்மையான ஆலயம், புனரமைப்பு செய்து அதேநேரம் பழைமை மாறாமல் புதுப்பிக்கும் வகையை செவ்வனே, சிறப்புறச் செய்த கோயில் என்று யுனெஸ்கோ விருது வழங்கி அறிவித்து உள்ளது.

’ரங்கா... ரங்கா...’ என அழைத்தபடி, தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, கேரளா என பல மாநிலங்களில் இருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குவியும் திருவரங்கத்துக்குக் கிடைத்த பெருமை, ஏனைய அனைத்துப் பக்தர்களுக்கும், அங்கே உள்ள ஆச்சார்யர்களுக்கும் கோயில் நிர்வாகிகளுக்கும் மிக முக்கியமாக ஊழியர்களுக்கும் சென்றடைய வேண்டியது என்கிறார்கள் அரங்கனின் பக்தர்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x