Published : 05 Jun 2014 18:48 pm

Updated : 05 Jun 2014 18:48 pm

 

Published : 05 Jun 2014 06:48 PM
Last Updated : 05 Jun 2014 06:48 PM

வார ராசி பலன் 5-6-2014 முதல் 11-6-2014 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

5-6-2014-11-6-2014

மேஷ ராசி வாசகர்களே!

ஜன்ம ராசியில் சுக்கிரனும் 2-ல் புதனும் 6-ல் செவ்வாயும் உலவுவதால் புதிய பொருட்களின் சேர்க்கையைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணைவரால் ஓரிரு எண்ணங்கள் இப்போது ஈடேறும். கலைஞர்களது நிலை உயரும். மக்களால் அளவோடு அனுகூலம் உண்டாகும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். எந்திரப் பணியாளர்களுக்கும் பொறியாளர்களுக்கும் செழிப்பு கூடும்.

அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியம் நிறைவேறும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்களின் சேர்க்கையோ, ஆதாயமோ பெற வாய்ப்பு உண்டாகும். குரு 3-ல் இருப்பதால் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. பிறரிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ,ஜூன் 8, 9. | திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, தெற்கு.

நிறங்கள்: வெண்மை, பச்சை, சிவப்பு | எண்கள்: 5, 6, 9.

பரிகாரம்: நாகர் வழிபாடு நலம் தரும். துர்க்கை அம்மனுக்கு நெய் விளக்கேற்றி வழிபடவும்.ரிஷப ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 6-ல் ராகுவும், 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். சுகானுபவம் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களால் ஓரளவு நலம் உண்டாகும். குடும்பத்தில் குதூகலம் கூடும். பேச்சில் திறமை வெளிப்படும். வசீகரச் சக்தி அதிகரிக்கும். நல்லவர்களது தொடர்பால் நலம் பல உண்டாகும். தெய்வக் காரியங்கள் நிறைவேறும். பணப் புழக்கம் அதிகரிக்கும்.

வெளிநாட்டு தொடர்புடன் செய்யும் தொழில் விருத்தி அடையும். புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள். அலைச்சல் வீண்போகாது. உழைப்புக்குரிய பயன் கிடைக்கும். கடன் உபத்திரவம் குறையும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். 5-ல் செவ்வாயும் 6-ல் வக்கிரச் சனியும் இருப்பதால் மக்களால் செலவுகள் கூடும். புதன் வக்கிரமாக இருப்பதால் வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 8, 9. l திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: பொன் நிறம், புகை நிறம், வெண்மை, இளநீலம். | எண்கள்: 3, 4, 6.

பரிகாரம்: முருகனை வழிபடவும்.மிதுன ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 11-ல் சுக்கிரனும் கேதுவும் உலவுவதால் நல்ல தகவல் வந்து சேரும். பெண்களால் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். மக்களால் அளவோடு நலம் உண்டாகும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும்.

இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் உடல் நலனில் அக்கறை தேவைப்படும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். 5-ல் வக்கிரச் சனியும் ராகுவும் உலவுவதால் தீய பழக்கங்களுக்கு இடம் தரலாகாது. நிறுவன, நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 8, 9. | திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, மெரூன். | எண்கள்: 6, 7.

பரிகாரம்: தன்வந்திரி ஜபம் செய்வது நல்லது. துர்க்கையை வழிபடவும். பெரியவர்களிடம் பணிவுடன் நடந்து கொள்ளவும்.கடக ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும் 10-ல் கேதுவும் 11-ல் சூரியனும் புதனும் உலவுவது சிறப்பாகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பேச்சாற்றல் பளிச்சிடும். அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும். முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகள் ஆகியோரால் நலம் உண்டாகும் எதிர்ப்புக்களை முறியடிக்கும் சக்தி பிறக்கும். நிலபுலங்கள் லாபம் தரும். புதிய சொத்துகள் சேரும்.

உடன்பிறந்தவர்களால் உங்களுக்கும் உங்களால் அவர்களுக்கும் அனுகூலம் உண்டாகும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும்,. வாரப் பின்பகுதியில் அலைச்சலும் உழைப்பும் அதிகரித்தாலும் அதற்கான பயனும் கிடைத்துவரும். சுப செலவுகள் சற்று அதிகரிக்கும். மாதர்கள், கலைஞர்கள் ஆகியோருக்கெல்லாம் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 8, 9, 11. | திசைகள்: வடமேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு.

நிறங்கள்: மெரூன், சிவப்பு, வெண்மை, ஆரஞ்சு. | எண்கள்: 1, 5, 7, 9.

பரிகாரம்: குரு, ராகு ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்யவும். வேத விற்பன்னர்களுக்கு உதவுவது நல்லது.சிம்ம ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 9-ல் சுக்கிரனும் 10-ல் சூரியனும் புதனும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். அந்தஸ்தும் மதிப்பும் உயரும். பலருமே உங்களைப் போற்றி புகழ்வார்கள். உடல்நலம் சீராக இருந்துவரும். உற்சாகம் பெருகும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். சுபகாரியங்கள் நிகழ வாய்ப்பு கூடிவரும். பணவரவு அதிகமாகும்.

அரசியல், நிர்வாகம், மருத்துவம், ரசாயனம், விஞ்ஞானம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். பொன்னும் பொருளும் சேரும். பயணத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்பு கூடிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 8, 9, 11. | திசைகள்: தென்மேற்கு, கிழக்கு, வடகிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: பொன் நிறம், ஆரஞ்சு, புகை நிறம், பச்சை, இளநீலம். | எண்கள்: 1, 3, 4, 5, 6.

பரிகாரம்: சுப்பிரமணியரையும், விநாயகரையும் வழிபடவும்.கன்னி ராசி வாசகர்களே!

சுக்கிரன் 8-ல் உலவுவது சிறப்பாகும். குரு 10-ல் இருந்தாலும் 2, 4, 6-ம் இடங்களைப் பார்ப்பது குறிப்பிடத்தக்கது. எதிர்பாராத பொருள் சேர்க்கை நிகழும். குடும்ப நலம் கவனிப்பின்பேரில் சீராகும். நிலபுலங்களால் ஓரளவு ஆதாயம் கிடைத்துவரும். ஜன்ம ராசியில் செவ்வாய் இருப்பதால் எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. 2-ல் வக்கிரச் சனியும் ராகுவும் 8-ல் கேதுவும் உலவுவதால் முன்பின் தெரியாதவர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம்.

வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். பயணத்தின்போது விழிப்புடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாரப் பின்பகுதியில் பொருள் வரவு சற்று அதிகரிக்கும். முக்கியமானதொரு காரியம் நிறைவேறும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 8, 9, 11. | திசை: தென்கிழக்கு.

நிறம்: வெண்மை, இளநீலம். | எண்: 6.

பரிகாரம்: விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதும் கேட்பதும் நல்லது. லட்சுமி அஷ்டகம் சொல்லவும்.

ராசி பலன்வார ராசி பலன்ராசிபலன்சந்திரசேகரபாரதி

You May Like

More From This Category

More From this Author