Published : 27 Dec 2014 12:07 PM
Last Updated : 27 Dec 2014 12:07 PM

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தமிழக எம்.பி.க்கள் 19 பேர் 100% வருகை: தேசிய சராசரியை விட தமிழக சராசரி அதிகம்

நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களில் தமிழகத்தின் 19 எம்.பி.க்கள் நாள் தவறாமல் நூறு சதவீதம் வருகை புரிந்துள்ளனர்.

இதுதொடர்பாக பி.ஆர்.எஸ் இந்தியா எனும் இணையதளம் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:

தமிழக அதிமுக எம்.பி.க்களில் ஏ.அருண்மொழித்தேவன், பி.செங்குட்டுவன், சி.மகேந்திரன், ஜி.ஹரி, ஜெ.ஜெயவர்தன், ஜெ.ஜெய்சிங் தியாகராஜ், கே.அசோக்குமார், கே.காமராஜ், கே.மரகதம், கே.ஆர்.பி.பிரபாகரன், எம்.வசந்தி, பி.நாகராஜன், ஆர்.வனரோஜா, ஆர்.கே.பாரதி மோகன், எஸ்.செல்வகுமர சின்னையன், டி.ராதாகிருஷ்ணன், டி.ஜி.வெங்கடேஷ் பாபு, வி.ஏழுமலை மற்றும் வி.சத்யபாமா ஆகியோர் 100 சதவீதம் வருகை புரிந்துள்ளனர்.

தேசிய, தமிழக சராசரி பதிவு

நாடு முழுவதுமான அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் சராசரி வருகை பதிவு 85 சதவீதம். தமிழக எம்.பி.க்களின் சராசரி வருகை பதிவு 94 சதவீதமாக உள்ளது.

தவிர, கே.கோபால், கே.என்.ராமச்சந்திரன், எஸ்.ராஜேந்திரன், எஸ்.ஆர்.விஜய்குமார் மற்றும் வி.பன்னீர் செல்வம் ஆகிய ஐந்து அதிமுக எம்.பி.க்கள் 98 சதவீத வருகைப் பதிவு வைத்துள்ளனர்.

நடந்து முடிந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் மிகக் குறைவான வருகை புரிந்தவராக அதிமுகவின் ராமநாதபுரம் தொகுதி உறுப்பினர் ஏ.அன்வர் ராசா இருக்கிறார். எனினும், இவர் 80 சதவீத வருகைப் பதிவு வைத்துள்ளார்.

தமிழக எம்பிக்களில் மிகக் குறைந்த வருகைப்பதிவை, தஞ்சாவூர் எம்.பி. கே.பரசுராமன் 75 சதவீதம் வைத்துள்ளார்.

பாமக உறுப்பினரான அன்புமணி, முதல் கூட்டத்தொடரில் 33 சதவீதமும், பட்ஜெட் கூட்டத் தொடரில் 56 மற்றும் குளிர்காலக் கூட்டத் தொடரில் 68 சதவீதமும் வருகை புரிந்துள்ளார். அன்புமணியின் சராசரி வருகை சதவீதம் 58 மட்டுமே.

அதிமுகவின் அவைத் தலைவ ராக இருந்த எம்.தம்பிதுரை, மக்கள வையின் துணை சபாநாயகராகி விட்டதாலும், பாஜ எம்.பி.யான பொன்.ராதாகிருஷ்ணன் அமைச்ச ராக இருப்பதாலும் வருகை பதிவேட்டில் கையொப்பம் இடவேண்டிய அவசியம் இல்லை. எனினும், சபாநாயகராவதற்கு முன்னதாக முதல் கூட்டத்தொடரில் 100, பட்ஜெட் தொடரில் 96 சதவீத வருகைப்பதிவை தம்பித்துரை வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x