Published : 18 Dec 2014 10:26 AM
Last Updated : 18 Dec 2014 10:26 AM

நெல்லை - மும்பை இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருநெல்வேலி- லோக்மான்ய திலக் ரயில் நிலையம் (மும்பை) இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி- லோக்மான்ய திலக் ரயில் நிலையம் இடையேயான சிறப்பு ரயில், திருநெல்வேலியில் இருந்து டிசம்பர் 27, ஜனவரி 3, 10 ஆகிய தேதிகளில் காலை 7.55 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் மாலை 4.20 மணிக்கு லோக்மான்ய திலக் ரயில் நிலையத்தை சென்றடையும். அங்கிருந்து டிசம்பர் 25, ஜனவரி 1, 8 ஆகிய தேதிகளில் பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் இரவு 10 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

பிரீமியம் சிறப்பு ரயில்

அசாம் மாநிலம் காமக்யா- பெங்களூர் கண்டோண்மென்ட் இடையே டிசம்பர் 23, 30, ஜனவரி 6, 13, 20 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் பிரீமியம் சிறப்பு ரயில், வியாழக்கிழமைகளில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து மாலை 3.15 மணிக்கு பெங்களூர் புறப்பட்டு செல்லும்.

பெங்களூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து டிசம்பர் 19, 26, ஜனவரி 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் காலை 10.15 மணிக்கு புறப்படும் பிரிமீயம் சிறப்பு ரயில்கள், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்து அங்கிருந்து மாலை 4.25 மணிக்கு காமக்யாவுக்கு புறப்படும்.

புவனேஸ்வர்- பெங்களூர் பிரீமியம் சிறப்பு ரயில், டிசம்பர் 31 முதல் மார்ச் 30-ம் தேதி வரை புதன் மற்றும் சனிக்கிழமைகளில் புவனேஸ்வரத்தில் இருந்து புறப் பட்டு பெங்களூர் கண்டோண் மென்ட் ரயில் நிலையத்தை சென்றடைகிறது. இந்த ரயில் வெள்ளி மற்றும் திங்கள் கிழமைகளில் பெங்களூர் கண்டோண்மென்ட் ரயில் நிலை யத்திலிருந்து புறப்பட்டு புவனேஸ்வரத்தை சென்றடை கிறது. இந்த ரயில் ஜோலார் பேட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x