Published : 27 Oct 2014 06:11 PM
Last Updated : 27 Oct 2014 06:11 PM
ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஒருவர் கூட முதல் 10 சிறந்த வீரர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. டேவிட் வார்னர், யூனிஸ் கான் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் கண்ட முதல் பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் 4 இடங்கள் முன்னேறி 7-வது இடம் பிடித்துள்ளார்.
தோல்வி கண்ட ஆஸ்திரேலிய அணியின் ஒரே சிறந்த பேட்ஸ்மென் டேவிட் வார்னர் 4-ஆம் இடத்திற்கு முதல் முறையாக முன்னேறியுள்ளார்.
டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இலங்கை வீரர் சங்கக்காரா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். டிவிலியர்ஸ், சந்தர்பால், வார்னர், அஞ்சேலோ மேத்யூஸ், ஹசிம் ஆம்லா, யூனிஸ் கான், ராஸ் டெய்லர், ஜோ ரூட், மைக்கேல் கிளார்க். ஆகிய பேட்ஸ்மென்கள் முதல் 10 இடத்தை ஆக்ரமித்துள்ளனர்.
பந்து வீச்சுத் தரவரிசையில், டேல் ஸ்டெய்ன், ரயான் ஹேரிஸ், ரங்கனா ஹெராத், மிட்செல் ஜான்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன், வெர்னன் பிலாண்டர், டிம் சவுதீ, பிராட், கிமார் ரோச், சயீத் அஜ்மல் ஆகியோர் முதல் 10 இடங்களில் உள்ளனர்.
ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் மிட்செல் ஜான்சன் (37 மற்றும் 61 ரன்களை துபாய் டெஸ்டில் எடுத்ததால்) 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர் ஸ்டூவர்ட் பிராடை பின்னுக்குத் தள்ளினார்.
ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் தொடர்ந்து இந்தியாவின் அஸ்வின் முதலிடம் வகிப்பது மட்டுமே இந்திய கிரிக்கெட்டிற்கு பெருமை சேர்க்கும் அம்சமாகும்