Published : 09 Oct 2014 10:38 am

Updated : 09 Oct 2014 13:04 pm

 

Published : 09 Oct 2014 10:38 AM
Last Updated : 09 Oct 2014 01:04 PM

அஜய் மேத்தா - இவரைத் தெரியுமா?

$ மைக்ரோசாப்ட் டிவைஸ் இந்தியாவின் (இதற்கு முன்பு நோக்கியா இந்தியா) நிர்வாக இயக்குநர். இவருக்கு முன்பு நிர்வாக இயக்குநராக இருந்த பாலாஜி ராஜினாமா செய்ததை அடுத்து, இந்திய வர்த்தகத்தைக் கூடுதலாக இவர் கவனிக்கிறார்.

$ சுமார் பத்து ஆண்டுகளாக நோக்கியா நிறுவனத்தில் பல முக்கிய பொறுப்புகளில் பணி புரிந்துள்ளார். குறிப்பாக சிங்கப்பூர் ரிடெய்ல் பிரிவின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.


$ சென்னை ஐஐடியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கும், கொல்கத்தா ஐஐஎம்-இல் நிர்வாக படிப்பும் படித்தவர்.

$ படித்து முடித்தவுடன் 1993-ம் ஆண்டு உதவி பிராண்ட் மேலாளராக ஐடிசி நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு பல பொறுப்புகளில் இருந்தவர் 2003 முதல் 2005-ம் ஆண்டு வரை கோக கோலா நிறுவனத்தில் பணியாற்றினார். 2005-ம் ஆண்டு நோக்கியாவுக்கு வந்தார்.

$ சென்னை ஆலை உற்பத்தி நிறுத்தப்பட்ட பிறகு வியட்நாமில் இருக்கும் Hanoi ஆலையில் இருந்து செல்போன்கள் இறக்குமதி செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார். இப்போது Hanoi-யில் இருந்து வருகிறது. நாளை எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம் என்று கூறியிருக்கிறார்.

அஜய் மேத்தாஇவரைத் தெரியுமா

You May Like

More From This Category

More From this Author