Published : 22 Jun 2020 04:48 PM
Last Updated : 22 Jun 2020 04:48 PM

நெட்டிசன் நோட்ஸ்: விஜய் பிறந்த நாள் - தனி சாம்ராஜ்ஜியம்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் இன்று தனது 46-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

sarath kennady

என் ரசனையின் ஆரம்பப் புள்ளி விஜய்.. பிறந்த நாள் வாழ்த்துகள்.

HBD தளபதி விஜய்

என் அழகிய தமிழ் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

Virat Ranjith

எதிர்ப்புகள் விமர்சனங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி இந்திய சினிமா வரலாற்றில் முதன் முறையாக உச்சம் தொடும் தமிழன் #தளபதி விஜய் அண்ணாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.
Ashok R

நம்ம லவ் பண்ற பொண்ணு நம்மளை லவ் பண்ணலைன்னா ஜென்டில்மேனா நடந்துக்கணும், stalk பண்ணி டார்ச்சர் பண்ணக் கூடாது, அதோட உயிர எடுக்கக் கூடாது என ஒரு தலைமுறைக்கு சொல்லிக் கொடுத்த 'பூவே உனக்காக', 'யூத்' போன்ற படங்களைக் கொடுத்த விஜய்க்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

B L A C K

நாளைக்கும் என்னும் சொல்லை நீ தள்ளிப்போடு. இன்றைக்கே முடித்துவிடு.

விளக்கின் அடியிலும் இருட்டுகள் உண்டு வெளிச்சம் தேடி எடு!

#HBDTHALAPATHYVijay


DON ஸ்டைல் பாண்டி

சுறாவுக்கு அப்பறம் காணாம போய்ருவானு பலர் நெனச்ச இதே துறையில 'நண்பன்', 'துப்பாக்கி', 'கத்தி', 'தெறி', 'மெர்சல்', 'பிகில்'னு யாரும் நெனச்சுப் பாக்காத உயரம்.

மென்மேலும் சிறக்க வாழ்த்துகள். விஜய்...

ᴋɪᴍ

சூப்பர் ஸ்டார்ங்கிறது ஹிட், ஃப்ளாப்லாம் தாண்டி மீடியாவால கொண்டாடத் தவிர்க்கவே முடியாதபடியான ஒரு பிராண்ட்! அந்த எடத்துல விஜய் தான் இப்ப.

Meganathan

பிறந்த நாள் வாழ்த்துகள் விஜய் அண்ணா. திரைத் துறையில் உங்கள் வளர்ச்சி அனைவருக்கும் முன் உதாரணம்.


iyarkaimanithan

யார் பின்னே நின்றாலும் வெற்றி என்ற ஒன்றைத் தொடர்ந்து பெற திறமையும் உழைப்பும் மட்டுமே வேண்டும் என்று நிரூபித்துக் காட்டியவர்!

யுவராஜ்
தமிழ் சினிமாவின் முழுமதி ..

தயாரிப்பாளர்களின் வெகுமதி ..

எங்கள் இதயத்து அதிபதி ..

இளைய தளபதி விஜய் அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.


HBD தளபதி விஜய்

தலைவா, நாங்கள் இதே அன்புடன் என்றென்றும் உங்க கூட இருப்போம். நீங்கள் சொன்னது போல எங்க குடும்பத்தைத்தான் முதலில் பார்ப்போம். பிறகுதான் எல்லாமே.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தளபதி.

HBD தளபதி விஜய்

இன்று உங்கள் பிறந்த நாள்
என்றும் அது சிறந்த நாள்
இனிய இந்நன்னாளில்
எல்லா வளமும் நலமும் பெற்று
தேக பலம்
பாத பலம்
ஆயுள் பலம்
பெற்று
வாழிய பல்லாண்டு...

பிரேம்

சோதனைகளைச் சாதனைகளாக்கி தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி வரும் தளபதி விஜய்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

தளபதி விஜய்

உசுப்பேத்துரவங்க கிட்ட உம்முனும்
கடுப்பேத்துரவங்க கிட்ட கம்முன்னும்
இருந்தா நம்ம வாழ்க்கை ஜம்முனு இருக்கும்

சயின்டிஸ்ட் சந்துரு:)

எல்லார்க்குமே நம்மளப் பிடிச்சுப் போச்சுனு வைங்களே லைப் போரடிச்சுராது.. கொஞ்ச பேர்க்காது நம்மளப் பிடிக்காம இருந்தா தான் லைஃப் ஜாலியா இன்ட்ரஸ்டீங்கா இருக்கும்... ஒருமாதிரி சுவாரசியமாகப் போகும்... பிறந்த நாள் வாழ்த்துகள் விஜய்..

_Blank_

விஜய் ரசிகன் என்று சொல்ல பலர் கூச்சப்பட்ட காலமும் கடந்து வந்திருக்கிறோம். அதையெல்லாம் தகர்த்து எம்மை தலை நிமிரச் செய்து, இன்று வானுயர்ந்து நிற்கிற என் தளபதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Abi charm

80s வரை, MGR - சிவாஜி .

80sஇல் இருந்து, கமல் - ரஜினி.

90sஇல் இருந்து விஜய் .

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x