Published : 25 Jun 2014 11:04 AM
Last Updated : 25 Jun 2014 11:04 AM

மாணவர்களிடம் ஓவியங்களால் பேசும் தமிழரசன்: ஒரு இயற்கை ஆர்வலரின் விடாமுயற்சி

சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பின் அவசியத்தை பலரும் பல வழிகளில் உணர்த்திக் கொண்டிருக் கிறார்கள். ஓவியர் தமிழரசன், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பின் அவசியத்தை தனது ஓவியங்கள் மூலம் பேச வைத்துக் கொண்டிருக் கிறார்.

விருத்தாசலத்தை அடுத்த மன்னம்பாடியைச் சேர்ந்தவர் தமிழரசன். சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியம் படித்தவர், 17 ஆண்டுகள் சென்னையில் கழித்துவிட்டு சில ஆண்டுகளுக்கு முன்புதான் சொந்த ஊருக்கு திரும்பினார். முன்பு பசுமையாய் தெரிந்த அவரது கிராமத்து வயல் வெளிகள் காய்ந்து கருகிப் போய் கிடந்ததைப் பார்த்தவர் அதற்கான காரணத்தை தேடியபோது தனியார் ஆலை ஒன்றின் நச்சுக் கழிவுகள்தான் காரணம் எனத் தெரியவந்தது. அதன்பிறகு நடந்ததை ஓவியரே விளக்குகிறார்.

’’முன்பெல்லாம் ஓடைத் தண்ணீரை அள்ளிக் குடித்துக் கொண்டிருந்த என் கிராமத்து சனம் இப்போது பாட்டில் தண்ணீருடன் அலைகிறது. காரணம் அந்த ஆலைக் கழிவு. எனது நண்பர்கள் சிலரிடம் இதுகுறித்து ஆதங்கப்பட்டேன். ’நீதான் ஓவியனாச்சே.. நூறு பக்கத்தில் எழுதிச் சொல்லமுடி யாத அவலத்தை ஒரே ஒரு படத்தை வைத்து அழகாய் சொல்லி விடலாமே’ என்றார்கள் நண்பர் கள். அதை உந்துதலாக எடுத்துக் கொண்டு சுற்றுப்புறச்சூழல் மாசுபாடு குறித்து ஓவியங்களை வரைய ஆரம்பித்தேன். 2010 புத்தாண்டில் அந்த ஓவியங்களை வைத்து கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில், ‘உலகைக் காப் போம்’ என்ற தலைப்பில் கண்காட்சி நடத்தினேன். அதில், புவி வெப்பமயமாதலின் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத் தும் 50 ஓவியங்களை பார்வைக்கு வைத்திருந்தேன். நல்ல வரவேற்பு இருந்ததால் அனைத்து மாவட்டங் களிலும் அந்தக் கண்காட்சியை நடத்தினேன்.

அடுத்த வருடம் நான் எடுத்துக் கொண்ட தலைப்பு ‘மண் மனிதம் காப்போம்’ வளமான மண் இருக்கும் இடத்தில் மனிதன் வாழமுடியவில்லை. மனிதர்கள் இருக்கும் இடத்தில் மண் வளம் இல்லை. இந்த அவலத்தைச் சொல்லும் 50 விதமான ஓவியங்களைக் கொண்டு தமிழகம் முழுவதும் கண்காட்சி நடத்தினேன். 2012-ல் ‘புவியைக் காப்போம்’ என்ற தலைப்பில் கண்காட்சியை ஏற்பாடு செய்தேன். 2013-ல் ‘தானே புயலும் நீலகிரி நிலச்சரிவும்’ என்ற தலைப்பில் புயலும் நிலச்சரிவும் உருவாகக் காரணம் என்ன என்பது குறித்த ஓவியங்களை வரிசைப்படுத்தி இருந்தேன். இந்த ஆண்டு ‘மரம் உலகின் நுரையீரல்’ என்ற தலைப்பில் கண்காட்சிகளை நடத் திக் கொண்டிருக்கிறேன். ஆனால், மரங்களின் மகத்துவம் மக்களுக்கு தெரியவில்லை.’’ கண்கள் பளிச்சிட சொன்னார் தமிழரசன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x