Published : 12 Nov 2014 01:00 PM
Last Updated : 12 Nov 2014 01:00 PM

வன்னியர் சங்க நிர்வாகி கொலையில் 4 பேர் சரண்

வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவராக இருந்த பூம்புகார் மேலபெரும்பள்ளத்தை சேர்ந்தவர் மூர்த்தி(48). இவர் கடந்த 2-ம் தேதி செம்பனார்கோவில் அருகே வெடிகுண்டு வீசியும், வெட்டியும் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக பாமக மாநில துணைப் பொதுச் செயலராக இருந்த அகோரம் ஆலந்தூர் நீதிமன்றத்தில் 3-ம் தேதி சரணடைந்தார்.

இந்த கொலையில் தொடர் புடையதாக புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன், அகோரத்தின் கார் ஓட்டுநர் பாபு, வெடிகுண்டு தயாரித்த திருவெண் காடு சூர்யா மற்றும் புதுச்சேரி கூலிப் படையினர் 4 பேர் உள்ளிட்ட 13 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப் பட்டனர். இதில் ஏற்கெனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சீர்காழி வட்டத்தைச் சேர்ந்த ஜெயசூர்யா, பவுல்ராஜ், தினேஷ்குமார், தமிழரசன் ஆகியோர் கடலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் நேற்று சரணடைந்தனர். 4 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x