Last Updated : 28 Mar, 2018 09:13 AM

 

Published : 28 Mar 2018 09:13 AM
Last Updated : 28 Mar 2018 09:13 AM

ஆலைகளுக்கு தானமாகும் தாமிரபரணி தண்ணீர்

தா

மிரபரணி தண்ணீர் விவசாயம், குடிநீர் தேவைகளுக்கே போதுமானதாக இல் லாத நிலையில், ஆலைகளுக்கு மிகக் குறைந்த விலை யில் தானமாக வழங்கப்படுவதற்கு பல ஆண்டுகளாகவே தொடர் எதிர்ப்பு இருந்து வருகிறது.

திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் சிப்காட் மற்றும் தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுப்பதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள். தூத்துக்குடியில் ஸ்டெர் லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் விவசாயிகளும் பொதுமக்களும் அணிதிரள இது வும் முக்கிய காரணமாகும்.

தாமிரபரணி தண்ணீரை தூத்துக்குடி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு திருவைகுண்டம் அணை வடகால் மூலம் வழங்குவதற்கு கடந்த 1970-ம் ஆண்டு 20 எம்ஜிடி திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது, ரூ. 4.70 கோடியில் நிறைவேற்றப்பட்ட திட்டம், 1975-ம் ஆண்டு தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி, நாள் ஒன்றுக்கு 20 மில்லியன் காலன் தண்ணீர் அதாவது 30 லட்சம் கன அடி நீரை திருவைகுண்டம் அணை வடகா லில் இருந்து எடுத்து தூத்துக்குடி பகுதி யில் உள்ள ஸ்பிக், டாக், அனல்மின் நிலையம், தாரங்கதாரா ரசாயன ஆலை, தூத்துக்குடி சிப்காட், ஸ்டெர்லைட், பழையகாயல் ஜிர்கோனியம் உள்ளிட்ட ஆலைகளுக்கு வழங்கப்படுகிறது.

இந்த, 20 எம்ஜிடி திட்டம் காரணமாக கடந்த 1975-க்குப் பிறகு, தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி பாசனத்தில் கடந்த 35 ஆண்டுகளாக கார் சாகுபடிக்கு அனு மதி வழங்கப்படவில்லை. முன்கார் சாகுபடிக்கும் முறையாக அனுமதி கிடைக்கவில்லை. பிசான சாகுபடிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இச்சூழ்நிலையில் மேலும் 3 எம்ஜிடி தண்ணீரை கூட்டி 20 எம்ஜிடி திட்டத்தை 23 எம்ஜிடி திட்டமாக மாற்றி ரூ. 28 கோடி செலவில் திருவைகுண்டம் அணைக்கு மேல் பகுதியில் இருந்து 24 கிமீ தொலைவுக்கு ராட்சத குழாய்கள் பதித்து, மூடிய குழாய் மூலம் தூத்துக்குடி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுத்து செல்லும் வகையில் மூடிய நிலை திட்டம் நிறைவேற்றப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக ராட்சத குழாய் மூலமே நீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தாமிரபரணி நதி நீர் உரிமை, பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்புக்கே சொந்தம். இங்கிருந்து தண்ணீர் எடுக்க பொதுப்பணித்துறையுடன் உடன்படிக்கை செய்ய வேண்டும். ஆனால், 20 எம்ஜிடி திட்டத்துக்கு எந்தவித உடன்படிக்கையும் செய்யாமல், குடிநீர் வடிகால் வாரியம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீர் எடுத்து வருகிறது என்கின்றனர் தன்னார்வ அமைப்பினர்.

தற்போதும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நெல் அறுவடை தொடங் கிய நிலையில், பாசனத்துக்கான நீர்தேவை குறைந்துவிட்டது. ஆனால், ஆலைகளின் தேவைக்காக தண்ணீர் மிதமிஞ்சி திறக்கப்பட்டுள்ளதாக பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x