Last Updated : 06 Jun, 2016 11:59 AM

Published : 06 Jun 2016 11:59 AM
Last Updated : 06 Jun 2016 11:59 AM

மாங்காய் சட்னி

என்னென்ன தேவை?

மாங்காய்த் துண்டுகள் - ஒரு கப்

தேங்காய் - அரை மூடி

பச்சை மிளகாய் - 4

பூண்டு - 2 பல்

கடுகு - கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

மாங்காய், தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், பூண்டு, தேவையான உப்பு இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்தெடுங்கள். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, இந்தச் சட்னியில் சேருங்கள். டிபன் வகைகளுக்குத் தொட்டுக்கொண்டு சாப்பிடச் சுவையாக இருக்கும். சூடான சாதத்தில் போட்டுப் பிசைந்தும் சாப்பிடலாம்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x