Published : 21 May 2014 12:27 PM
Last Updated : 21 May 2014 12:38 PM
புது டெல்லியில் உள்ள சாஸ்திரி பவனில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.
மத்திய டெல்லியில் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனில் இன்று காலை 9.45 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 8 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க போராடி வருகின்றன.
முதலில், தீ வளாகத்தின் ஏழாவது தளத்தில் பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.