‘அன்பில் அவன்’ முதல் ‘ஹைக்கூ’ வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் பட்டியல்

‘அன்பில் அவன்’ முதல் ‘ஹைக்கூ’ வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் பட்டியல்
Updated on: 
2 min read

திரையரங்குகளில் அதிரடி படங்கள் வரிசைகட்ட, வார இறுதியைக் குதூகலமாக்கிட ஓடிடி தளங்களில் அணிவகுக்கின்றன காதல் மற்றும் கலாட்டா படங்கள். இந்த வாரம் வெளியாகும் படங்களின் பட்டியல் இது.  

அன்பில் அவன்: ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான படம் ‘அன்பில் அவன்’. இந்தப் படத்தில் அவருடன் ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சம்த், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தனது மனைவி இயாலின் ‘விண்டேஜ் ஹோம்ஸ்டே’ விருப்பத்துக்காக நகர வாழ்க்கையைத் துறந்து மலை பகுதிக்கு வசிக்கச் செல்கிறார் சூர்யா. 

அங்கு அவர்கள் வாங்கி இருக்கும் பாரம்பரியமான பங்களாவில்  இருந்து தம்பதியை வெளியேற்ற முயற்சிக்கிறார் ஓர் உள்ளூர் முக்கிய பிரபலம். இந்தப் பிரச்சனையில் இருந்து தனது மனைவியையும், தங்களின் புதிய வாழ்க்கையையும்  பாதுகாக்க சூர்யா எடுக்கும் முயற்சியே படம். செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியான இந்த ரொமாண்டிக் த்ரில்லர் படம் நவம்பர் 20 அன்று சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

பிரேமதா ஊரளி: மனோஜ் குமார் இயக்கத்தில் வெளியான கன்னடப் படம் ‘பிரேமதா ஊரளி’. இந்தப் படத்தில் ஸ்ரீராம்,  தபஸ்வினி பூனாச்சா, ராமிகா ஷிவு, ரங்கயனா ரகு, இலா விட்லா, கோவிந்த கவுடா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கன்னட கிராமம் ஒன்றில் வசிக்கும் சந்துவுக்கு அவரது தந்தை படித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்.

சந்துவோ வெளிநாட்டிலிருந்து திரும்பிய இளம் பெண் ருக்மணி மீது காதல் கொள்கிறான். காதலுக்கும் தந்தையின் விருப்பத்துக்கும் இடையில் சிக்கிக் கொள்ளும் சந்துவின் முடிவைப் பற்றிக் பேசுகிறது இந்தப் படம். செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியான இந்த காதல் படம் நவம்பர் 17 அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்: அப்துல் கபீஸ் இயக்கத்தில்  வெளியாகி இருக்கும் தமிழ் இணையத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’. இந்தத் தொடரில் பிரதீப் ஆண்டனி, ஸ்மேகா மணிமேகலை, ஷனம் ஷெட்டி, மகிழ் திருமேனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கும் தம்பதியான அறிவும், ஐஸ்வரியாவும் அலுவலகத்தில் அந்நியர்கள் போல காட்டிக்கொள்ளும் சூழலில் இருக்கிறார்கள்.

தங்களின் ரகசியத்தை மறைக்க முயற்சிக்கும் அதேவேளையில் கண்டிப்பான மேலாளரையும், சக ஊழியர்களையும் அவர்கள் இருவரும் சமாளிப்பதே கதை. இந்த நகைச்சுவைத் தொடர், நவம்பர் 18 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.

418: கீர்த்தன் நடகவுடா இயக்கத்தில் வெளியான படம் ‘418’. இதில் சைத்ரா ஜே ஆச்சார், சூர்யா ராஜ் வீரபதினி, சரண் லக்கராஜூ, பிரீத்தி பகடாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மருத்துவ கல்லூரி விடுதியில், 15 ஆண்டுகளாக பூட்டப்பட்டிருக்கும் அறையில் உலவும் ஆவியிடம் அங்குள்ள மாணவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த ஆவியிடமிருந்து அவர்கள் தப்பி பிழைத்தார்களா என்பதே படம். அக்டோபர் 23 அன்று திரையரங்குகளில் வெளியான இந்த திகில் படம் நவம்பர் 20 அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

கிகு சிரஞ்சீவி: சுபாஷ் சாய் வெங்கட் இயக்கத்தில் வெளியான தெலுங்கு படம் ‘கிகு சிரஞ்சீவி’. இதில் கிகு யானமாலா, கஷிஷ் கான், ஈஸ்வரி ராவ், தனிகெல்லா பரணி உள்ளிடோர் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 28 அன்று திரையரங்குகளில் வெளியான இந்த த்ரில்லர் படம் நவம்பர் 18 அன்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.  

கிரேஸி கல்யாணம்: பத்ரப்பா கஜுலா இயக்கத்தில் வெளியான படம் ‘கிரேஸி கல்யாணம்’. இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், தருண் பாஸ்கர் தாஸ்யம், விஜய கிருஷ்ண நரேஸ், அகில் ராஜ் உட்டேமாரி, ஹர்ஷவரதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அக்டோபர் 26 அன்று திரையரங்குகளில் வெளியான இந்த நகைச்சுவைப் படம் நவம்பர் 20 அன்று ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

‘அன்பில் அவன்’ முதல் ‘ஹைக்கூ’ வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் பட்டியல்
சட்டமும் நீதியும் 2: மறைக்கப்பட்ட உண்மையின் மற்றொரு பக்கம் | ஓடிடி திரை அலசல்

X