பியார் பிரேமா கல்யாணம்: புகுந்த வீட்டுக்குப் போகும் மாப்பிள்ளை!

பியார் பிரேமா கல்யாணம்: புகுந்த வீட்டுக்குப் போகும் மாப்பிள்ளை!
Updated on
1 min read

திருமணம் முடிந்தபின் புகுந்த வீட்டில் மணமகள் குடியேறுவது உலக வழக்கம். மாறாக மாப்பிள்ளை தனது பெட்டி, படுக்கையை எடுத்துக்கொண்டு மாமியார் வீட்டுக்குக் கண்ணீருடன் புறப்பட்டால் எப்படியிருக்கும்? இந்த வித்தியாசமான கதைக் களத்துடன் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தை இயக்கி, நாயகனாக நடித்திருக்கிறார் இளன்.

ஆகஸ்ட் 21ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகும் இப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டிருக்கிறார்கள். படத்தில் மணமகளாக பவி என்கிற கதாபாத்திரத்தில் சான்வி மேக்னா நடித்துள்ளார்.

அவரையும் அவரது குடும்பத் தையும் எதிர்கொள்ளும் மணமகனாக இளன். காதல், குடும்ப உணர்வுகள் இரண்டையும் கலந்து நகைச்சுவை பொங்கலாக ‘பியார் பிரேமா கல்யாணம்’ உருவாகி யுள்ளது என்கிறார் இயக்குநர். இந்த ஓடிடி படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா

பியார் பிரேமா கல்யாணம்: புகுந்த வீட்டுக்குப் போகும் மாப்பிள்ளை!
உண்மையை ஒளிக்க முடியாது! | சுட்ட கதை 40

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in