ஜியோ ஹாட்​ஸ்​டாரில் ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்​டர்​ஸ்’

ஜியோ ஹாட்​ஸ்​டாரில் ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்​டர்​ஸ்’
Updated on
1 min read

போஸ் வெங்​கட், காயத்ரி முதன்மை பாத்​திரங்​களில் நடித்​துள்ள வெப் தொடர், ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்​டர்​ஸ்’. ராஜ் அய்​யப்​பா, நிகிலா சங்​கர், லூதுஃப், கிஷோர், ஷ்ரவ்​னி​தா, புரமோ​தினி உள்ளிட்ட பலர் நடித்​துள்​ளனர்.

‘உப்பு புளி காரம்’ வெப் தொடரைத் தயாரித்​தக் குழு இதை​யும் தயாரித்​துள்​ளது. இதை ‘உப்பு புளி காரம்’, ‘போலீஸ் போலீஸ்’ போன்ற தொடர்​களை இயக்​கிய சிதம்​பரம் மணிவண்​ணன் இயக்கி​யுள்​ளார். நகைச்​சுவை, உணர்​வுப்​ பூர்​வ​மான தருணங்​கள் மற்​றும் அன்​றாட வாழ்க்​கை​யின் நெருக்​கத்தை இணைக்​கும் இக்கதை, 4 உடன் ​பிறந்​தவர்​களின் உறவு​களை மைய​மாகக் கொண்​டுள்​ளது.

போஸ் வெங்​கட், ஜவுளிக் கடையை நிர்​வகிக்​கும் கண்​டிப்​பான, பாரம்​பரியமிக்க தந்​தை​யாக​வும், குடும்​பத்​தை வழி நடத்​தும் மென்​மை​யான சுபாவம் கொண்ட இல்​லத்​தரசி​யாக காயத்​ரி​யும் தோன்​றுகின்​றனர். பாசம், நகைச்​சுவை, விறு​விறுப்​பான நாடகத் தன்​மை​யின் சிறப்​பான கலவை​யாக இத்​தொடர் இருக்​கும். பார்வை​யாளர்​கள் தங்​களை எளி​தில் தொடர்​புப்​படுத்​திக் கொள்ளக் ​கூடிய கதை​யம்​சத்​துடன்​ உரு​வாகி​யுள்​ள இத்​தொடர்​ மே மாதம்​ வெளியாக இருக்கிறது.

ஜியோ ஹாட்​ஸ்​டாரில் ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்​டர்​ஸ்’
Ullozhukku: அன்பும் மன்னிப்பும், அஞ்சுவும் லீலாம்மாவும் | திரை தேவதைகள் 14

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in