ஓடிடி தளத்தில் ‘யூத்’ சாதனை

ஓடிடி தளத்தில் ‘யூத்’ சாதனை
Updated on
1 min read

ஓடிடி தளத்திலும் கென் கருணாஸ் இயக்கி, நடித்துள்ள ‘யூத்’ சாதனை புரிந்துள்ளது. கென் கருணாஸ் இயக்கி, நடித்து வெளியான படம் ‘யூத்’. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

உலகளவில் ரூ.82 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை புரிந்ததால் படக்குழு பெரும் உற்சாகமாக இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி அங்கும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ட்ரெண்டிங் பகுதியில் 2-ம் இடத்தில் உள்ளது ‘யூத்’. இப்படத்துக்குப் பிறகே பவன் கல்யாண் நடித்துள்ள ‘உஸ்தாத் பகத் சிங்’ படமே இடம்பெற்றுள்ளது.

இது இணையவாசிகள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஓடிடி தளத்திலும் கிடைத்துள்ள வரவேற்பினால் பெரும் உற்சாகமாகியுள்ளது படக்குழு. ‘யூத்’ படத்துக்குப் பிறகு கென் கருணாஸ் இயக்கி, நடிக்கவுள்ள படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அவரை ஒப்பந்தம் செய்து, தயாரிக்க பல்வேறு முன்னணி தயாரிப்பாளர்கள் கடும் போட்டியிட்டு வருகிறார்கள்.

ஓடிடி தளத்தில் ‘யூத்’ சாதனை
Ullozhukku: அன்பும் மன்னிப்பும், அஞ்சுவும் லீலாம்மாவும் | திரை தேவதைகள் 14

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in