விஜய்யின் ‘ஜனநாயகன்’ ஆக.21-ல் ஓடிடியில் ரிலீஸ்!

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ஆக.21-ல் ஓடிடியில் ரிலீஸ்!
Updated on
1 min read

முதல்வர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படம் ஆகஸ்ட் 21-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, ஜீ5 தமிழ் அதன் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றுடன் தகவல் பகிர்ந்துள்ளது. அதில், ‘தங்கமே, தளபதி, ஜனநாயகன் ஆகஸ்ட் 21-ம் தேதி ஜீ5-ல் உங்களைச் சந்திக்கிறார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் பகிர்ந்துள்ள வீடியோவில், ‘அரண்மனை போன்ற பிரம்மாண்டமான ஒரு வீட்டில் இருந்து ஜீப் ஒன்று கிளம்புகிறது. அந்த ஜீப் கூவம், நேப்பியர் பாலத்தில் வரும்போது அதனுள் தமிழக முதல்வர் விஜய் அமர்ந்து ஜீப்பை ஓட்டுவது தெரிகிறது.

ஜீப் வேகமாக செல்ல, அதன் பக்கக் கண்ணாடியில் முதல்வர் விஜயின் முந்தைய படங்களின் சில கதாபாத்திரங்கள் மாறிமாறித் தெரிகிறது.

அந்த ஜீப் நேராக சென்று தலைமைச் செயலகம் முன்பு நிற்க, தலைமைச் செயலகத்தின் பின்னணியில் அவர் நடந்து வர, காட்சி கலைந்து தற்போதைய கோட் சூட் உடையில் கம்பீரமாக நடந்து வருகிறார் முதல்வர் விஜய்.

கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, சென்சார் பிரச்சினை, இணையத்தில் முழுப் படமும் லீக், ஏ சான்றிதழ் என பல சிக்கல்களைக் கடந்து, ஒருவழியாக ‘ஜனநாயகன்’ படம், ஜூலை 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 

ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத என்டர்டெயினராக இருந்துவந்த விஜய் தனது கடைசித் திரைப்படமாக ‘ஜனநாயகன்’ படத்தை அறிவித்திருந்தார். பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் படம் வெளியாகி இருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருந்தது.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ‘ஜனநாயகன்’ ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ஆக.21-ல் ஓடிடியில் ரிலீஸ்!
ஜனநாயகன்: விமர்சனம் - இதுதான் விஜய்யின் கடைசிப் படமா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in