ஓடிடி-யில் ஹாலிவுட் படங்களை ஓரங்கட்டிய ‘துரந்தர்’: நெட்பிளிக்ஸ் தலைவர் டெட் சரண்டோஸ் புகழாரம்

ஓடிடி-யில் ஹாலிவுட் படங்களை ஓரங்கட்டிய ‘துரந்தர்’: நெட்பிளிக்ஸ் தலைவர் டெட் சரண்டோஸ் புகழாரம்
Updated on
1 min read

புதுடெல்லி: பாலிவுட் நடிகர் ரன்​வீர் சிங் நடிப்​பில், ஆதித்யா தார் இயக்​கத்​தில் வெளி​யான ‘துரந்​தர்’ திரைப்​படம் 2026-ம் ஆண்​டில் நெட்பிளிக்ஸ் தளத்​தில் உலகள​வில் மிக​வும் பார்க்​கப்​பட்ட ஆங்​கிலம் அல்​லாத திரைப்​பட​மாக மாறி, ஹாலிவுட் படங்​களை​யும் மிஞ்சி வரலாற்​றுச் சாதனை படைத்​துள்​ளது. இந்​தி​யப் படங்​கள் உலகள​வில் பெரும் சாதனை படைத்து வரு​வ​தாக நெட்பிளிக்ஸ் தலை​வர் டெட் சரண்​டோஸ் கூறி​யுள்​ளார்.

டெல்​லி​யில் நடை​பெற்ற ஒரு நிகழ்ச்​சி​யில் பேசிய டெட் சரண்​டோஸ், இந்த ஆண்​டில் நெட்பிளிக்​ஸில் அதி​கம் பார்க்​கப்​பட்ட ஆங்​கிலம் அல்​லாத திரைப்​பட​மாக ‘துரந்​தர்’ சாதனை படைத்​துள்​ள​தாக​வும், அமெரிக்கா மற்​றும் இங்​கிலாந்​துக்கு அடுத்​த​படி​யாகப் பல ஆங்​கிலப் படங்​களை விட​வும் அதிக பார்​வை​களைப் பெற்​றுப் புதிய உச்​சத்​தைத் தொட்​டுள்​ள​தாக​வும் தெரி​வித்​தார்.

இந்த ஆண்​டின் முதல் பாதி​யில் மட்​டும் இப்​படத்​தின் முதல் பாகம் 37 மில்​லியன் பார்​வை​களைப் பெற்​று, 22 நாடு​களின் நெட்பிளிக்ஸ் தரவரிசை​யில் முதலிடம் பிடித்​தது. மேலும், திரையரங்​கு​களில் இதன் இரு பாகங்​களும் இணைந்து ரூ.3,100 கோடிக்கு மேல் வசூலித்​துள்ள நிலை​யில், இதன் இரண்​டாம் பாக​மான ‘துரந்​தர்: தி ரிவெஞ்ச்’ இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் பாலிவுட் படம் என்ற சாதனையைப் படைத்​துள்​ளது.

தென்​கொரி​யா​வின் ‘ஸ்​கு​விட் கேம்’ அல்​லது ஸ்பெ​யினின் ‘மனி ஹெய்​ஸ்ட்’ போன்ற உலகளா​விய வெற்றி இந்​தி​யா​வுக்கு எப்​போது கிடைக்​கும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இந்​தி​யா​வில் ஏற்​கெனவே அத்​தகைய வெற்​றிகள் தொடர்ந்து கிடைத்​துக் கொண்​டு​தான் இருக்​கிறது எனக் கூறி​னார்.

மேலும், இந்​தி​யா​வில் தயாரித்த ‘சேக்​ரட் கேம்​ஸ்’ தொடர் ஒரு புதிய அனுபவ​மாக இருந்​ததைச் சுட்​டிக்​காட்​டிய அவர், நீண்ட சினிமா பாரம்​பரி​யம் கொண்ட இந்​தி​யா​வில் இது​போன்ற சாதனை​கள் திரைப்​படங்​கள் மூல​மாகவே சாத்​தி​ய​மாகி வரு​வ​தாகப் பாராட்​டி​னார்.

கடந்த 2025 டிசம்​பரில் திரையரங்​கு​களில் வெளி​யான ‘துரந்​தர்’ முதல் பாகம், 2026 மார்ச் மாதத்​தில் வெளி​யான இரண்​டாம் பாகத்​தின் திரையரங்க வெளி​யீட்​டுக்கு முன்பே நெட்பிளிக்​ஸில் வெளி​யானது. தற்​போது இதன் இரண்​டாம் பாக​மான ‘துரந்​தர்: தி ரிவெஞ்ச்' திரைப்​படம் இந்​தி​யா​வில் ஜியோ ஹாட்​ஸ்​டார் தளத்​தி​லும், சர்​வ​தேச அளவில் நெட்பிளிக்​ஸ்​ தளத்​தி​லும்​ ஒளிபரப்​பாகி வருகிறது.

ஓடிடி-யில் ஹாலிவுட் படங்களை ஓரங்கட்டிய ‘துரந்தர்’: நெட்பிளிக்ஸ் தலைவர் டெட் சரண்டோஸ் புகழாரம்
டே​விஸ் கோப்பையில் கொரியா - இந்​தியா கடினத் தரை​ ஆடுகளத்தில் மோதல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in