டே​விஸ் கோப்பையில் கொரியா - இந்​தியா கடினத் தரை​ ஆடுகளத்தில் மோதல்

டே​விஸ் கோப்பையில் கொரியா - இந்​தியா கடினத் தரை​ ஆடுகளத்தில் மோதல்
Updated on
1 min read

புதுடெல்லி: டேவிஸ் கோப்பை டென்​னிஸ் போட்​டி​யில் கொரி​யா, இந்​தியா மோதும் போட்​டிகளை கடினத் தரை​யில் (ஹார்ட் கோர்ட்) முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

டேவிஸ் கோப்பை டென்​னிஸ் போட்​டிக்​கான தகு​திச் சுற்​று-2 ஆட்​டங்​கள் செப்​டம்​பர் 18, 19-ம் தேதி​களில் தென் கொரி​யா​வின் சியோல் நகரில் நடை​பெறவுள்​ளன.

இந்​தப் போட்​டிகள் கடினத் தரை மைதானங்​களில் நடைபெறவுள்ளன. டேவிஸ் கோப்பை போட்​டித் தரவரிசை​யில் இந்​தியா 19-வது இடத்​தி​லும், கொரியா 16-வது இடத்​தி​லும் உள்ளன. இரு அணி​களுக்கு இடையி​லான நேருக்கு நேர் மோதலில் தென் கொரியா 6-5 என்ற கணக்​கில் முன்​னிலை​யில் உள்​ளது.

இந்​தப் போட்​டி​யில் பங்​கேற்​றும் இந்​திய வீரர், வீராங்​க​னை​களின் பெயர்​கள் வரும் 10-ம் தேதி (நாளை) அறிவிக்​கப்​பட​வுள்​ளன.

இதற்கு முன்பு 2016-ல் சண்​டீகரில் நடை​பெற்ற ஆசி​யா/ஒஷி​யானா குரூப்-1 சுற்​றுப் போட்​டி​யில் இந்​தி​யா, தென் கொரியா அணி​கள் மோதி​யிருந்​தன. இதில் இந்​தியா 4-1 என்ற கணக்​கில் வெற்றி பெற்​றிருந்​தது.

சியோலில் நடை​பெறும் தகு​திச் சுற்​று-2-ல் வெற்றி பெறும் அணி​கள் டேவிஸ் கோப்பை இறு​திச்​சுற்​று 8-க்​குத் ​தகு​தி பெறும்​.

டே​விஸ் கோப்பையில் கொரியா - இந்​தியா கடினத் தரை​ ஆடுகளத்தில் மோதல்
2025-ல் நாட்டின் ரத்த சேகரிப்பு 1.58 கோடி யூனிட்களாக உயர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in