ஜன.6-ல் ஓடிடியில் வெளியாகிறது வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’

ஜன.6-ல் ஓடிடியில் வெளியாகிறது வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’
Updated on
1 min read

வடிவேலு நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் வரும் ஜனவரி 6-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்த ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஷிவாங்கி, ஆனந்த்ராஜ், ரெடின் கிங்க்ஸ்லி, முனிஷ்காந்த், மனோபாலா, ‘லொள்ளுசபா’ மாறன், ஷிவானி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், படம் வெளியான முதல் நாளே எதிர்மறை விமர்சனங்கள் வெளியாகத் தொடங்கின. இதனால் படம் பெரிய அளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில், படம் வரும் ஜனவரி 6-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in