Published : 05 Dec 2022 03:14 PM
Last Updated : 05 Dec 2022 03:14 PM

டிச.9-ல் ஓடிடியில் வெளியாகிறது சுந்தர்.சி-யின் ‘காஃபி வித் காதல்’

சுந்தர்.சி இயக்கத்தில் உருவான ‘காஃபி வித் காதல்’ திரைப்படம் வரும் டிசம்பர் 9-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த ஆண்டு 'அரண்மனை 3' படம் வெளியானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கி புதிய படம் ‘காஃபி வித் காதல்’. குஷ்புவின் 'அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட்' மற்றும் 'பென்ஸ் மீடியா நிறுவனங்கள்' இணைந்து தயாரித்த இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படம் கடந்த நவம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்ட இப்படம் வசூலில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இந்நிலையில், படம் வரும் டிசம்பர் 9-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x