சூரியின் ‘மாமன்’ விரைவில் ஓடிடியில் ரிலீஸ்!

சூரியின் ‘மாமன்’ விரைவில் ஓடிடியில் ரிலீஸ்!
Updated on
1 min read

சூரி கதையின் நாயகனாக நடித்த ‘மாமன்’ திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான படம் ‘மாமன்’. இதில் ராஜ்கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

இப்படம் ரூ.40 கோடிக்கு மேல் தமிழகத்தில் வசூல் சாதனை புரிந்தது. குடும்ப உறவுகள் குறித்து பேசிய இப்படம் கடந்த மே 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் இப்படம் விரைவில் ஜீ5 தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in