'அந்தகன்' முதல் 'இந்தியன் 2' வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

'அந்தகன்' முதல் 'இந்தியன் 2' வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Updated on
1 min read

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.

தியேட்டர் ரிலீஸ்: பிரசாந்தின் ‘அந்தகன்’ திரைப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஹலீதா ஷமிம் இயக்கியுள்ள ‘மின்மினி’ படத்தை தியேட்டரில் பார்க்கலாம். நடிகர் ரஞ்சித் இயக்கியுள்ள ‘கவுண்டம்பாளையம்’ படம் வெளியாகியுள்ளது. வேல.ராமமூர்த்தி நடித்துள்ள ‘வீராயி மக்கள்’ வெளியிடப்பட்டுள்ளது. ஆசிஃப் அலியின் ‘அடியோஸ் அமிகோ’ (Adios Amigo) மலையாளப்படத்தை தியேட்டரில் காணலாம். ஊர்வசி ரவுடேலாவின் ‘குஸ்பைதியா’ இந்திப் படம் வெளியாகியுள்ளது. காதல் படமான ‘இட் என்ட் வித் அஸ்’ (it end with us) ஹாலிவுட் படம் வெளியாகியுள்ளது.

நேரடி ஓடிடி ரிலீஸ்: டாப்ஸி நடித்துள்ள ‘பிர் ஆயி ஹசீன் தில்ருபா’ (Phir Aayi Hasseen Dillruba) இந்திப் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் நேரடியாக வெளியிடப்பட்டுள்ளது.

திரையரங்குகளுக்குப் பிறகான ஓடிடி ரிலீஸ்: ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் உருவான ‘இந்தியன் 2’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் காணக்கிடைக்கிறது. மம்மூட்டியின் ‘டர்போ’ சோனி லிவ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. சன்னி வெயினின் ‘கோலம்’ (golam) மலையாளப் படம் அமேசான் ப்ரைமில் காணக்கிடைக்கிறது.

இணையத் தொடர்: கரண் ஜோஹர் தயாரித்துள்ள ‘கியாரா கியாரா’ (Gyaarah Gyaarah) இந்தி வெப் சீரிஸ் ஜீ5 ஓடிடியில் வெளியிடப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in