‘ரோமியோ’ முதல் ‘பிரேமலு’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

‘ரோமியோ’ முதல் ‘பிரேமலு’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Updated on
1 min read

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம்.

தியேட்டர் ரிலீஸ்: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘டியர்’ மற்றும் விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ படங்கள் திரையரங்குகளில் தற்போது காணக் கிடைக்கின்றன. அஜய் தேவ்கானின் ‘மைதான்’ இந்திப் படம் திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அக்‌ஷய்குமாரின் ‘படே மியான் சோடே மியான்’ இந்திப் படத்தை திரையரங்குகளில் காணலாம். ஃபஹத் ஃபாசிலின் ‘ஆவேஷம்’, வினீத் ஸ்ரீனிவாசனின் ‘வருஷங்களுக்கு சேஷம்’ மலையாள படங்களில் வெளியாகியுள்ளன.

நேரடி ஓடிடி ரிலீஸ்: இம்தியாஸ் அலியின் ‘அமர் சிங் சம்கிலா’ (Amar Singh Chamkila) இந்திப் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: ஊர்வசியின் ‘J.பேபி’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது. மமிதா பைஜூவின் ‘பிரேமலு’ மலையாள படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் காண முடியும்.

ரமேஷ் ஆறுமுகம் நடித்துள்ள ‘பைரி’ அமேசான் ப்ரைம் தளத்தில் காணக் கிடைக்கிறது. விஷ்வாக் சென் நடித்துள்ள ‘காமி’ தெலுங்கு திரைப்படம் ஜீ5 ஓடிடியில் காணக் கிடைக்கிறது. மிஷ்கின் இசையமைத்துள்ள ‘டெவில்’ ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது.

இணைய தொடர்கள்: வால்டன் கோக்கின்ஸின் ‘ஃபால் அவுட்’ (Fall Out) ஹாலிவுட் சீரிஸ் அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in