

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம். | தியேட்டர் ரிலீஸ்: ‘உறியடி’ புகழ் விஜய்குமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’, வைபவ்வின் ‘ஆலம்பனா’, கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி நடித்துள்ள ‘கண்ணகி’ ஆகிய படங்கள் நாளை (டிச.15) திரையரங்குகளில் வெளியாகிறது. ஜான் வூ இயக்கியுள்ள ‘சைலன்ட் நைட்’ (Silent Night) ஹாலிவுட் படம் நாளை வெளியாகிறது.
திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: கார்த்தியின் ‘ஜப்பான்’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் தற்போது காணக் கிடைக்கிறது. ‘பூ’ராமு, காளி வெங்கட் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிடா’ திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் நாளை (டிச.15) வெளியாகிறது. கல்யாணி ப்ரியதர்ஷனின் ‘சேஷம் மைக்-இல் பாத்திமா’ (Sesham Mike-il Fathima) மலையாள படத்தை நெட்ஃப்ளிக்ஸில் தளத்தில் நாளை காணலாம். பசில் ஜோசப் நடித்துள்ள ‘ஃபேமிலி’ மலையாள படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நாளை வெளியிடப்படுகிறது.
இணைய தொடர்கள்: வீரப்பனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட ‘கூச முனிசாமி வீரப்பன்’ ஆவண தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் தற்போது காணக்கிடைக்கிறது. தெலுங்கு த்ரில்லர் வெப் சீரிஸான ‘வியூஹம்’ (Vyooham) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.