‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ முதல் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ முதல் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ வரை - தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
Updated on
1 min read

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம். | தியேட்டர் ரிலீஸ்: சதீஷின் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ திரைப்படம் நாளை (நவ.8) திரையரங்குகளில் வெளியாகிறது. நானி நடித்த தெலுங்கு படமான ‘ஹாய் நானா’ படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. கமலின் ‘ஆளவந்தான்’ மற்றும் ரஜினியின் ‘முத்து’ படங்கள் திரையரங்குகளில் நாளை ரீ-ரிலீஸாகின்றன. காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ள ‘ரஜ்னி’ (Rajni) மலையாள படம் நாளை வெளியிடப்பட உள்ளது. ஆசிஃப் அலி நடித்துள்ள ‘ஏ ரஞ்சித் சினிமா’ மலையாள படத்தை நாளை திரையரங்குகளில் காணலாம். மனோஜ் பாஜ்பாயின் ‘ஜோராம்’ (Joram) இந்திப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

நேரடி ஓடிடி ரிலீஸ்: பங்கஜ் திரிபாதியின் ‘கடக் சிங்’ படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை காண முடியும். ஜாக்கி ஷெராஃபின் ‘மஸ்த் மே ரெஹேனே கா’ (Mast Me Rehne Ka) இந்திப்படம் அமேசாம் ப்ரைமில் நாளை வெளியாகிறது. ஜூலியா ராபர்ட்ஸின் ‘லிவ் தி வொர்ல் பிஹைண்ட்’ (Leave the World Behind) படத்தை நெட்ஃப்ளிக்ஸில் வெள்ளிக்கிழமை காண முடியும்.

திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்: கார்த்திக் சுப்பராஜின் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ நெட்ஃப்ளிக்ஸிலும், விக்ரம் பிரபுவின் ‘ரெய்டு’ படம் ஆஹா ஓடிடி தளத்திலும் நாளை காணக்கிடைக்கும். டோவினோ தாமஸின் ‘அத்ரிஷ்ய ஜலகங்கள்’ மலையாளப் படத்தை நெட்ஃப்ளிக்ஸில் நாளை பார்க்க முடியும். | இணைய தொடர்கள்: இந்தி வெப்சீரிஸான ‘சமக்’ சோனி லிவ் ஓடிடியிலும், தெலுங்கு வெப்சீரிஸான ‘வதுவு’ (vadhuvu) டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலும் தற்போது காணக்கிடைக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in