ஜி.வி.பிரகாஷின் ‘அடியே’ செப்.29-ல் ஓடிடியில் ரிலீஸ்

ஜி.வி.பிரகாஷின் ‘அடியே’ செப்.29-ல் ஓடிடியில் ரிலீஸ்
Updated on
1 min read

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடியே’ திரைப்படம் வரும் செப்டம்பர் 29-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், கவுரி கிஷன் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘அடியே’. மல்டியூனிவர்ஸ் காதல் கதையில் உருவான இப்படத்தை பிரபா ப்ரேம்குமார் தயாரித்திருந்தார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். வெங்கட்பிரபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். படத்தில் சில ஐடியாக்கள் ரசிகர்களை கவர்ந்தது.

ஆனால் ஒட்டுமொத்தமாக மல்டியூனிவர்ஸிலும் அதே பழைய காதல் கதையா என்ற ரீதியில் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதாக படக்குழு அண்மையில் சக்சஸ் மீட் கொண்டாடியது. இந்நிலையில் ‘அடியே’ வரும் செப்டம்பர் 29-ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in