Published : 28 Jul 2023 09:03 PM
Last Updated : 28 Jul 2023 09:03 PM

சார்லியின் ‘எறும்பு’ திரைப்படம் ஜூலை 31 ஓடிடி-யில் ரிலீஸ்

சென்னை: சார்லி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘எறும்பு’ படம் ஜூலை 31-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சுரேஷ் ஜி இயக்கத்தில் சார்லி எம்.எஸ்.பாஸ்கர், ஜார்ஜ் மரியன், மோனிகா சிவா, சக்தி ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘எறும்பு’. சுரேஷ் குணசேகரன் தயாரித்துள்ள இப்படத்துக்கு அருண் ராஜ் இசையமைத்துள்ளார். குறைந்த பட்ஜெட்டில் அளவான கதாபாத்திரங்களுடன் கதைக்கு முக்கியத்தும் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம் கடந்த ஜூன் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ஃபீல் குட் படமாக வரவேற்பை பெற்ற இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஜூலை 31-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x