Published : 23 May 2023 07:32 PM
Last Updated : 23 May 2023 07:32 PM

மே 26-ல் ஓடிடியில் ஃபஹத் பாசிலின் ‘பாச்சுவும் அல்புத விளக்கும்’ ரிலீஸ்

ஃபஹத் பாசில் நடித்துள்ள ‘பாச்சுவும் அல்புத விளக்கும்’ (Paachuvum Albhuthavilakkum) மலையாள படம் வரும் மே 26-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் ‘விக்ரம்’ மலையாளத்தில் ‘மலையன் குஞ்சு’ என அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்திய ஃபஹத் ஃபாசில் அடுத்ததாக நடித்துள்ள படம் ‘பாச்சுவும் அல்புத விளக்கும்’. அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பை கொடுக்கும் ஃபஹத் ஃபாசில் இந்தப் படத்திலும் அகில் சத்யன் என்ற இயக்குநருக்கு சினிமாவில் அறிமுகத்தை கொடுத்திருக்கிறார்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்தை ஃபுல் மூன் சினிமா நிறுவனம் தயாரித்திருந்தது. அஞ்சனா ஜெயபிரகாஷ், இன்னொசன்ட், வினீத், இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரூ.10 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.15 கோடி வரை வசூலித்தது.

இந்நிலையில் இப்படம் வரும் மே 26-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது. படத்தை மலையாளம் தவிர்த்து, தெலுங்கு, தமிழ் மொழிகளில் காண முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x