Published : 12 Mar 2023 12:27 PM
Last Updated : 12 Mar 2023 12:27 PM

மார்ச் 17-ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் ‘வாத்தி’

தனுஷ் நடித்துள்ள ‘வாத்தி’ திரைப்படம் வரும் மார்ச் 17-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘வாத்தி’. தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியான இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார். படத்தில் சம்யுக்தா, சமுத்திரகனி, மொட்ட ராஜேந்திரன், சாரா, ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.100 கோடி வசூலைக்கடந்தது. ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் கல்வியின் முக்கியத்துவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படம் வரும் மார்ச் 17-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x