Published : 19 Feb 2023 06:37 PM
Last Updated : 19 Feb 2023 06:37 PM

பிப்ரவரி 24-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’

சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மைக்கேல்’ திரைப்படம் பிப்ரவரி 24-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘புரியாத புதிர்’, ‘இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும்’ படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி. இவரது இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் கடந்த பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மைக்கேல்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் வரலட்சுமி சரத்குமார், அனுசுயா, திவ்யன்ஷா கௌசிக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தினை ஸ்ரீ வெங்கடேஷ்வரா ஸ்ரீனிவாஸ் தயாரிக்க, சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் இப்படம் வெளியானது. கலவையான விமர்சனங்களைப்பெற்ற இப்படம் வரும் பிப்ரவரி 24-ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x