Published : 15 Dec 2021 10:47 AM
Last Updated : 15 Dec 2021 10:47 AM

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் 'அன்பறிவு' 

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகியுள்ள 'அன்பறிவு' திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது.

சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்த படம் 'சிவகுமாரின் சபதம்'. இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதில் நடித்துக் கொண்டிருக்கும்போதே ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் மற்றொரு படத்தின் தயாரிப்புப் பணிகளையும் தொடங்கியது சத்யஜோதி நிறுவனம்.

அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அஸ்வின் ராம் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு 'அன்பறிவு' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இப்படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது.

இந்தப் படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியிருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், அதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிடாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் இப்படம் நேரடி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு இன்று (15.12.21) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் நெப்போலியன், விதார்த், காஷ்மீரா, சாய்குமார், ஊர்வதி, சங்கீதா க்ரிஷ், தீனா உள்ளிட்ட பலர் ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் நடித்துள்ளனர். இதன் ஒளிப்பதிவாளராக மாதேஷ் மாணிக்கம், எடிட்டராக ப்ரதீப் ராகவ், இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா ஆதி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தின் கதையை ஹிப் ஹாப் தமிழா ஆதியே எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x