Published : 14 Mar 2024 01:33 PM
Last Updated : 14 Mar 2024 01:33 PM

18 ஆபாச ஓடிடி தளங்கள் முடக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: ஆபாச உள்ளடக்கங்களைக் கொண்ட 18 ஓடிடி தளங்களை முடக்கி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தொடர் எச்சரிக்கைகளுக்குப் பிறகும் விதிமுறைகளுக்கு கட்டுப்படாமல் இயங்கி வந்த ஆபாச உள்ளடக்கங்களைக் கொண்ட 18 ஓடிடி தளங்கள், 19 இணையதளங்கள், 10 செயலிகள், 57 சமூக ஊடக பக்கங்கள் ஆகியவற்றை நாடு முழுவதும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை முடக்கியுள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டம், “2000-த்தின் படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட ஓடிடி தளங்கள்: Dreams Films, Voovi, Yessma, Uncut Adda, Tri Flicks, X Prime, Neon X VIP, Besharams, Hunters, Rabbit, Xtramood, Nuefliks, MoodX, Mojflix, Hot Shots VIP, Fugi, Chikooflix, Prime Play ஆகிய ஆபாச ஓடிடி தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இவற்றில் ஒரு ஓடிடி தளத்தின் செயலி கூகுள் பிளேஸ்டோரில் 1 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டதாகவும், இரண்டு செயலி 50 லட்சம் முறைக்கு மேல பதிவிறக்கம் செய்யப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் 12 பேஸ்புக் பக்கங்கள், 17 இன்ஸ்டாகிராம் பக்கங்கள், 16 எக்ஸ் (முன்னதாக ட்விட்டர்) பக்கங்கள், 12 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x