Published : 06 Feb 2024 04:48 PM
Last Updated : 06 Feb 2024 04:48 PM

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ பிப்.9-ல் ஓடிடியில் ரிலீஸ்!

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ திரைப்படம் வரும் 9-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. ரகுல் ப்ரீத் சிங், சரத் ​​கேல்கர், இஷா கோபிகர், பானு ப்ரியா, யோகிபாபு, கருணாகரன், பால சரவணன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

கச்சிதமான விஎஃப்எக்ஸ் காட்சிகளால் குழந்தைகளை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ரூ.80 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் ரூ.50 கோடி வசூலை தாண்டியுள்ளதாக படக்குழு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், படம் வரும் பிப்ரவரி 9-ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x