Published : 25 Nov 2016 12:01 PM
Last Updated : 25 Nov 2016 12:01 PM

உங்கள் குரல்: கோவையில் பெருகும் ஆகாயத்தாமரை

தொழிலாளர்களுக்கு சிறப்பு முகாம்?

கட்டிடத் தொழிலாளிக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.500. இதை பெறுவதற்காக, வங்கிக் கணக்கு தொடங்க முடியாது. எங்களை போன்றவர்களுக்காக தனியாக வங்கிக் கணக்கு தொடங்க சிறப்பு முகாம்கள் நடத்தி, வங்கிக் கணக்கு தொடங்க கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வபாண்டி, கோவை.

உடுமலையில் ஆக்கிரமிப்பு?

உடுமலை நகரில் சமீபத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அதேசமயம் மீண்டும் ஆக்கிரமிக்கும் போக்கு தொடர்கிறது. ஆகவே நகராட்சி தொடர் நடவடிக்கை மேற்கொண்டு, ஆக்கிரமிப்பு தொடரா வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பெயர் வெளியிட விரும்பாத வாசகர், உடுமலை.

தாராபுரம் ஏடிஎம் அவலம்?

தாராபுரம் நகரப்பகுதியில் ஏடிஎம் இயந்திரங்கள் எதுவும் கடந்த சில நாட்களாக முழுமையாக இயங்குவதில்லை. எப்போது சென்றாலும், பணம் இருப்பதில்லை. ஆகவே, இது தொடர்பாக, நடவடிக்கை எடுத்து, ஏடிஎம் இயந்திரங்கள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாகுல்ஹமீது, அலங்கியம்.

பேருந்துகளால் அவதி

கோவையில் இருந்து ஈரோடு செல்லும் அரசுப் பேருந்துகள், பெருந்துறை அருகே உள்ள பல்லகவுண்டன்பாளையம், விஜயமங்கலம், கருமத்தம்பட்டி, செங்கப்பள்ளி உள்ளிட்ட ஊர்களில் நின்று செல்ல வேண்டும். ஆனால், பெரும்பாலான பேருந்துகள் கோவை-சேலம் பிரதான சாலையிலேயே சென்று விடுகின்றன. இதனால், அந்த ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் அப்பகுதிகளுக்குச் செல்வோரை தேசிய நெடுஞ்சாலையிலேயே இறக்கிவிட்டுச் செல்வதால், அந்த ஊர்களுக்குச் செல்லும் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, அனைத்து பேருந்துகளும் குறிப்பிட்ட ஊர்கள் வழியாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பா.ரோகிணி, பல்லகவுண்டன்பாளையம்.

சுகாதாரச் சீர்கேடு

கோவை மாவட்டம் அரசூர் தென்னம்பாளையம் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குப்பை மற்றும் கோழி இறைச்சிக் கழிவுகளைக் கொட்டுகின்றனர். இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. அப்பகுதி மக்களுக்கு நோய் பரவவும் வாய்ப்புள்ளது. எனவே, அங்குள்ள குப்பை, கழிவுகளை அகற்றுவதுடன், அப்பகுதியில் குப்பை கொட்டாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரா.சதீஷ்குமார், சோமனூர்.

நீர் செல்ல வழி கிடைக்குமா?

கோவை தடாகம் சாலையில், சோமையனூர் அருகே உள்ள திருவள்ளுவர் நகரில் நீர்வழிப்பாதையில் தடுப்பணை உள்ளது. மழைக்காலத்தில் இந்த தடுப்பணை நிறைந்து, அடிக்கடி தண்ணீர் பெருக்கெடுக்கும். ஆனால் தண்ணீர் சாலையின் மறுபுறம் செல்ல போதுமான வசதிகள் இல்லை. சாலையிலேயே நீர் பெருக்கெடுத்துச் செல்வதால் அங்கு விபத்துகள் ஏற்படுகின்றன. தடுப்பணை நீர் செல்ல வசதிகள் செய்து தர வேண்டுமென பல வருடங்களாக கோரிக்கை இருந்து வருகிறது. மழை தொடங்கும் முன்பாக இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை தடாகம் சாலையில், சோமையனூர் அருகே உள்ள திருவள்ளுவர் நகரில் நீர்வழிப்பாதையில் தடுப்பணை உள்ளது. மழைக்காலத்தில் இந்த தடுப்பணை நிறைந்து, அடிக்கடி தண்ணீர் பெருக்கெடுக்கும். ஆனால் தண்ணீர் சாலையின் மறுபுறம் செல்ல போதுமான வசதிகள் இல்லை. சாலையிலேயே நீர் பெருக்கெடுத்துச் செல்வதால் அங்கு விபத்துகள் ஏற்படுகின்றன. தடுப்பணை நீர் செல்ல வசதிகள் செய்து தர வேண்டுமென பல வருடங்களாக கோரிக்கை இருந்து வருகிறது. மழை தொடங்கும் முன்பாக இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுப்பிரமணியன், கோவை.

போக்குவரத்து தீவு தேவை

பொள்ளாச்சி சாலையில், போத்தனூர் பிரிவு அருகே சரியான போக்குவரத்து சீரமைப்பு வசதிகள் இல்லை. போக்குவரத்து தீவு அமைக்கும் பணிகளும் பாதியில் நின்றுவிட்டன. அங்கு விபத்துகள் அதிகமாக நடந்து வருவதால், மாநகரப் போக்குவரத்துத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, அங்கு போக்குவரத்து தீவு அமைக்க வேண்டும். இருசாலைகளும் சந்திக்கும் இடம் என்பதால் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்.

சுந்தரேசன், போத்தனூர்.

பெருகும் ஆகாயத்தாமரை

கோவை உக்கடம் பெரியகுளத்தின் கரையை பலப்படுத்துவதற்காக கடந்த ஒரு வருடம் முன்பு பல கோடி ரூபாய் செலவிடப்பட்டது. வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் கரை பலப்படுத்தப்பட்டு, குளக்கரையில் சாலையும் அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் சில மாதங்கள் மட்டுமே குளக்கரைகள் சுத்தம் செய்யப்பட்டன. குப்பை, செடிகள் முளைக்க ஆரம்பித்து அதிக செலவில் அமைக்கப்பட்ட கரையில் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் உக்கடம் கழிவுநீர் தேங்கி, ஆகாயத்தாமரை அதிகமாகி வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்து குளத்தின் தூய்மையைக் காக்க வேண்டும்.

பஷீர், உக்கடம்.

*

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்... கீழே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர் முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

உங்கள் குரல் - தொலைபேசி எண்கள் சென்னை, காஞ்சிபுரம்- 044-42890002 | கோவை, திருப்பூர் - 044-42890003 | மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை - 044-42890004 | சேலம், தர்மபுரி, ஓசூர் - 044-42890005 | திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் - 044-42890006 | புதுச்சேரி - 044-42890007 | வேலூர்- 044-42890008 | தூத்துக்குடி, திருநெல்வேலி- 044-42890009

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x