Last Updated : 09 Jun, 2014 01:04 PM

 

Published : 09 Jun 2014 01:04 PM
Last Updated : 09 Jun 2014 01:04 PM

கால்பந்து: ஜெயிக்கப் போவது யாரு?

உலகக் கால்பந்து திருவிழா தொடங்குவதற்கு இன்னும் சில தினங்களே இருக்கின்றன. ஜூன் 12 அன்று பிரேசிலில் தொடங்கும் ஃபிஃபா 2014 உலகக் கோப்பையைக் கண்டுகளிக்க உலகம் முழுவதிலும் கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுக்க பிரபலமாக இருக்கும் கால்பந்து விளையாட்டை இந்தியா ஏனோ பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. ஃபிஃபா தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் தற்போதைய ரேங்க் 154. ஆனால் இங்கே இருக்கும் இளம் கால்பந்து ரசிகர்கள் ஃபிஃபா 2014 யை வரவேற்க தீவிரமாகத் தயாராகிவருகிறார்கள். ஃபிஃபா 2014 -ஐப் பற்றி அவர்கள் பகிர்ந்துகொண்டவை:

ப்ரியதர்ஷிணி, தஞ்சாவூர்

ஏன் கால்பந்து?

கால்பந்தின் கடைசி நொடி வரை இருக்கும் அந்த விறுவிறுப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். 90 நிமிட ஆட்டத்தில் வெற்றி யாருக்கு என்பதைக் கணிக்க முடியாது.

இந்தியாவின் நிலை:

இந்தியாவில் மேற்கு வங்காளம், கேரளா போன்ற மாநிலங்களில் மட்டுந்தான் கால்பந்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த நிலை மாறுவதற்கு அரசு எல்லா விளையாட்டுகளுக்கும் சமமான அங்கீகாரம் வழங்கினால் மட்டுமே சாத்தியம்.

பிடித்த அணி:

போர்ச்சுகல்

வெற்றி வாய்ப்பு:

ஸ்பெயின் அல்லது இங்கிலாந்து

யாருக்கு என்ன விருது?

கோல்டன் பூட்-கிரிஸ்டியானோ ரோனால்டோ, கோல்டன் க்ளோவ் - ஐகெர் காசிலஸ், ஃபேர் ப்ளே - இங்கிலாந்து

வெங்கடேஷ், கொல்கத்தா

ஏன் கால்பந்து?

கால்பந்தில் மூளை, உடல் இரண்டும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும். கால்பந்தில் கடைப்பிடிக்கப்படும் உத்திகள், குழுச் செயல்பாடு எனக்குப் பிடித்த விஷயம்.

இந்தியாவின் நிலை:

கிரிக்கெட்டில் ஆரம்பத்தில் கிடைத்த வெற்றி வாய்ப்புகள் இந்தியாவிற்கு அதிக கவனத்தைக் கொடுத்தது. ஆனால் இப்போது கிரிக்கெட் மட்டுமில்லாமல் அனைத்து விளையாட்டுகளிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. கால்பந்திற்கான லீக் போட்டிகள் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்துவருகின்றன. இது கால்பந்தின் மீது இந்தியாவின் கவனத்தைத் திருப்பும்.

பிடித்த அணி:

ஜெர்மனி

வெற்றி வாய்ப்பு:

பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா. என் கணிப்பு படி இறுதியாட்டம் பிரேசிலுக்கும் ஜெர்மனிக்கும் நடக்கும்.

யாருக்கு என்ன விருது?

கோல்டன் பூட்- லயனல் மெஸ்ஸி அல்லது நெய்மர், கோல்டன் பால்- மிராஸ்லோவ் க்ளோஸ், கோல்டன் க்ளோவ் - ஐகெர் காசிலஸ், ஃபேர் ப்ளே - ஸ்பெயின்

மெல்வின் வில்லியம், சென்னை

ஏன் கால்பந்து?

ஆரம்பத்தில் தீவிரமான கிரிக்கெட் ரசிகனாகவே இருந்தேன். ஆனால் ஐபிஎல்லில் நடந்த சூதாட்டம் என்னைக் கடுமையாகப் பாதித்தது. அதற்குப் பிறகுதான் என் ஆர்வம் கால்பந்து பக்கம் திரும்பியது.

மேற்கு வங்காளம், கோவா, கேரளாவில் மட்டும் வளர்ச்சியடைந்துவரும் கால்பந்து ஐ-லீக்கிற்குப்பிறகு இங்கேயும் பிரபலமடைந்துவிடும். நமது தேசிய விளையாட்டாக இருக்கும் ஹாக்கி, உலக நாடுகள் கொண்டாடும் கால்பந்து என எதற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் வெறும் கிரிக்கெட்டை மட்டுமே தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவதில் எந்த நியாயமும் இல்லை.

இந்தியாவின் நிலை:

பிடித்த அணி:

பிரான்ஸ்

வெற்றி வாய்ப்பு :

பிரேசில் அல்லது ஜெர்மனி

யாருக்கு என்ன விருது?

கோல்டன் பூட்- லயனல் மெஸ்ஸி அல்லது நெய்மர், கோல்டன் பால்- ப்ரான்க் ரிப்பரி, கோல்டன் க்ளோவ் - மேனுவல் நியுயர், ஃபேர் ப்ளே - ஜெர்மனி அல்லது உருகுவே

கிஷோர் கே. குமார், கோவை

ஏன் கால்பந்து?

கால்பந்தில் ஆட்டம் முழுவதும் இருக்கும் வேகம் எனக்கு மிகவும் பிடித்த அம்சம். இந்த விளையாட்டின் ஸ்டைல், தந்திரங்கள் என்னை எப்போதும் உற்சாகப்படுத்தும்.

இந்தியாவின் நிலை:

குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே அனைத்து விளையாட்டுகளையும் அறிமுகப்படுத்த வேண்டும். அப்படி செய்யும்போது கிரிக்கெட்டிற்கு மட்டும் கிடைக்கும் கவனம் குறையும்.

பிடித்த அணி:

பெல்ஜியம்

வெற்றி வாய்ப்பு:

பிரேசில், ஸ்பெயின் அல்லது ஜெர்மனி

யாருக்கு என்ன விருது?

கோல்டன் பூட்- நெய்மர், கோல்டன் பால்- மிராஸ்லோவ் க்ளோஸ், கோல்டன் க்ளோவ் - ஐகெர் காசிலஸ், ஃபேர் ப்ளே - ஸ்பெயின்

கிரிக்கெட் என்ற ஒன்றை மட்டுமே விளையாட்டாக நினைக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் இவர்ருடைய கால்பந்து ஆர்வம் ஆறுதல் அளிக்கிறது. ஐ-லீக்கிற்குப் பிறகாவது இந்த நிலைமை மாறுகிறதா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x