Published : 06 Jun 2015 06:08 PM
Last Updated : 06 Jun 2015 06:08 PM

விஷம் கலந்து குப்பைகளாய் நம்உணவு: தங்கராஜ்

செய்தி:>உணவு மாதிரிகளில் ஐந்தில் ஒரு பங்கில் கலப்படம்: இந்திய அளவில் தமிழகமும் முதன்மை

'தி இந்து' ஆன்லைன் வாசகர் தங்கராஜ் கருத்து:

சாப்பாட்டு விஷயத்தில் கழுதையும் மனிதனும் ஒன்றுதான். கழுதை காலையிலிருந்து தெருக்களில் கிடக்கும் குப்பைக் கூளங்களை தின்று வயிறு புடைத்தபின் மாலையில் தண்ணீர் குடிக்கும்போது மேல் தாடை பற்களையும் கீழ்த்தாடை பற்களையும் நெருக்கமாக வைத்து கொண்டு தண்ணீர் குடிக்கும்.

ஏன் பற்களை அப்படி நெருக்கமாக வைத்து கொண்டு தண்ணீர் குடிக்கிறாய் என்று கேட்டால் , "தண்ணீரில் தூசி கிடக்கும் அது வயிற்றுக்குள் போனால் உடல் நலத்திற்கு கேடு, என் அழகு வேறு கெட்டுவிடும் என்று கூறும். (காலையிலிருந்து மாலை வரை அது என்ன சாப்பிட்டது என்று எல்லோருக்கும் தெரியும்).

அதுபோல மனிதனும் விஷம் கலந்த குப்பைகளை உணவாக உட்கொள்கிறோம் என்று தெரிந்தும் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகள் அதை தடை செய்யாததால் நாதியற்றவர்களாக அதை அப்படியே தின்னும் நிலையில் தான் மனிதனும் உள்ளான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x