Published : 11 Jun 2015 02:21 PM
Last Updated : 11 Jun 2015 02:21 PM

ஆற்றின் அழிவோடு நாகரிகங்களும் அழியும்: ஜான்சன்

கட்டுரை:>ஒரு நதியின் வாக்குமூலம்: துடிக்கிறாள் படியளக்கும் பவானி!

'தி இந்து' ஆன்லைன் வாசகர் ஜான்சன் பொன்ராஜ் கருத்து:

நீர் மின் திட்டங்களுக்காக ஆற்றில் பெரும் அணைகளைக் கட்டுவது, ஆற்றின் போக்கை திசை மாற்றுவது, தொழிற்சாலை ரசாயன, சாயக் கழிவுகள், நகராட்சிக் கழிவுகளை ஆற்றில் கலப்பது உள்ளிட்ட காரணங்களால், இன்று இந்தியாவில் பல ஆறுகள் இறந்துவிட்டன.

உயிருள்ள ஆறுகள் (Perennial River) அருகிவிட்டன. பல இறந்து கொண்டிருக்கின்றன. ஆற்றங்கரையில் தோன்றிய மனித நாகரிகங்களான சிந்து சமவெளியின் ஹரப்பா, பண்டைய மொசபடோமிய சுமேரியர்கள், அமெரிக்காவின் மாயா, அனாசாஜி, வடஅமெரிக்காவின் ஹோகோகம் ஆகியவை ஆற்றின் அழிவையொட்டியே அழிந்தன என்பது வரலாறு.

தமிழகத்தில் பவானியும் தாமிரபரணியும் மட்டுமே உயிருள்ள நதிகள் என்று பெருமையாகச் சொல்கிறார்கள். ஆனால், அது பழம் பெருமை. உண்மையில், அவற்றின் குரல்வளையை நசுக்கிக் கொண்டிருக்கிறோம். அவை, மூச்சுத் திணறி செத்துக் கொண்டிருக்கின்றன.

இதேநிலை தொடர்ந்தால் இன்னும் பத்து ஆண்டுகளில் இரு ஆறுகளும் கூவத்தைப்போல, நொய்யலைப்போல இறந்து போகும். ஓர் ஆற்றின் அழிவு என்பது அதன் அழிவு மட்டுமல்ல; நமது அழிவும்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x