Published : 25 Jun 2015 02:25 PM
Last Updated : 25 Jun 2015 02:25 PM

தகுதியற்ற கல்லூரிகளால் தடுமாறும் கல்வித்துறை: நிதியன்

செய்தி:>தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் முதுநிலை பொறியியல் பட்டதாரிகளின் நிலை கேள்விக்குறி: ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிப்பு

'தி இந்து' ஆன்லைன் வாசகர் நிதியன் கருத்து:

நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் 3மாதம் முதல் 6 வரை ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.

ஊதியம் கேட்டால் அவர்களை ஊதியமே தராமல் வீட்டுக்கு அனுப்பிவிட்டு மேலும் வாடகை பேராசிரியர்களைக் கொண்டு அங்கீகாரம் பெற்று கல்லூரி நடத்துகிறார்கள். அங்கீகார தணிக்கைக்கு வருபவர்களும் லட்சகணக்கில் பணம் பெற்று பெயருக்கு தணிக்கை செய்துவிட்டு செல்கிறார்கள்.

இதன் விளைவு தகுதியற்ற ஆசிரியர்களைக் கொண்டு கல்லூரி நடத்தி மணவர்களின் எதிர்காலத்தை இருளாக்குகிறது. வேலையிலிருந்து அனுப்புவது, தரக்குறைவாக பேசுவது, மாதக்கணக்கில் சம்பளம் தராமல் இருப்பது, சர்டிபிகேட்டை தராமல் இழுக்கடிப்பது, அல்லது மூன்றுமாதம் சம்பளம் கட்டினால்தான் சர்டிகேட்டை தருவேன் என்று சொல்வது.

இன்று பொறியியல் துறையில் கணிணி அறிவியல் மற்றும் தொலைத்தொடர்புத்துறையில் பட்டம் பெற்ற பல்கலைக்கழக ரேங்க் பெற்ற மாணவன் தன் வீட்டு கணினியை சிறு பழுதை சரிசெய்ய அடுத்தவரை நாடவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x