Published : 05 May 2015 02:35 PM
Last Updated : 05 May 2015 02:35 PM

இது ஒரு கார்ப்பரேட் வெற்றி தந்திரம்: சுவாமிதாசன்

செய்தி:>சீன சமூக வலைத்தளத்தில் கணக்கு தொடங்கினார் மோடி

'தி இந்து' ஆன்லைன் வாசகர் சுவாமிதாசன் கருத்து:

ஒரு அரசியல் மேதமையாக தன் ஆளுமையை உலக அரங்கில் நிலை நாட்ட மோடிக்கு இருக்கும் தணியாத ஆசையைத் தான இது போன்ற செயல்கள் வெளிக்காட்டுகின்றன. சுபீட்சமான எதிர்கால வளர்ச்சியின் கனவு நாயகனாக, கழிந்த தேர்தலில் வெற்றிகரமாக இது போன்ற யுக்திகள் மூலம் தன்னை விளம்பரமும், வியாபாரமும் செய்து இந்திய அட்சியைப் பிடித்துவிட்டார்.

இதையே உலக அரங்கில் இப்போது செய்கிறார். இது ஒரு கார்ப்பரேட் வெற்றி தந்திரம். இதுவே மோடியின் வெற்றி பார்முலா. ஆனால் இவரது வாக்குகள், செயல் பாட்டிலும், இவர் விளம்பரம் செய்யும் கனவுகள், அரசின் திட்டங்களிலும் பிரதிபலிக்காவிட்டால் இவரை வெறும் ஒரு விளம்பர பிரியராக மட்டுமே சரித்திரம் பதிவு செய்து ஒதுக்கிவிடும்.

ஒரு தேசத்தின் வளர்ச்சி கவர்ச்சிப் பேச்சுகளினாலும், கோசங்களினாலும் மட்டுமே வராது. அனைத்து மக்களின் வாழ்வாதாரத் தேவைகளையும் உள்ளடக்கிய சிறந்த திட்டங்களால் மக்களின் முனைப்பைக் கூர்மையாக்கி அவற்றை வெற்றிகரமாக செயல் படுத்தினால் மட்டுமே வளர்ச்சி ஏற்படும். அதிக விளம்பரம் ஒரு ஆபத்தான அரசியல் பாரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x