Published : 08 May 2015 01:28 PM
Last Updated : 08 May 2015 01:28 PM

ஒழுக்கம் பின்னுக்குத் தள்ளப்படலாமா?- சுகுமார்

கட்டுரை:>காந்தியை ஏமாற்றிவரும் இந்தியா

தி இந்து ஆன்லைன் வாசகர் சுகுமார் கருத்து:

பள்ளிகளில், முன்பு நீதி போதனை (Moral Instruction) என்றொரு வகுப்பு இருந்தது. அந்த வகுப்பில் பெரும்பாலும் 'கதை சொல்லுதல்', 'பாட்டு பாடுதல்...' என பொழுதுபோக்கு அம்சமே நிறைந்திருக்கும். இப்போது அந்த வகுப்பு சுத்தமாக எடுக்கப்பட்டுவிட்டது.

இப்போது நீதி போதனை சொல்லுவதற்கு யாருக்கும் நேரமும் இல்லை, அதை கேட்கும் பொறுமை மாணவர்களுக்கும் இல்லை. மதிப்பெண் ஒன்றே பிரதானம் என்றாகி விட்டது. அதிக மதிப்பெண்கள் பெற்றால் பெரிய பதவிக்குச் செல்லலாம், அதிக சம்பளத்தில் உத்தியோகம் பெறலாம் என்கின்ற லாஜிக்கே முன்னால் வைக்கப்படுகிறது. இங்கே ஒழுக்கம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது.

ஆக, சமூகம் எப்படி போனால் நமக்கென்ன? என்கின்ற மனநிலை எல்லோரிடமும் வியாபித்திருகிறது. பள்ளிகளில் ஒழுக்கத்தை கற்பிப்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆளும் அரசுகளே சட்ட நடைமுறைகளை சீராக கடைபிடிப்பதில்லையே! அதன்விளைவுதனே போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடைஞ்சல் தரும் வகையில் கட்-அவுட்டுகளும், விளம்பர பாதகைகளும்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x