Published : 17 Nov 2014 05:07 PM
Last Updated : 17 Nov 2014 05:07 PM

தமிழ்ச் சமூகத்தில் ரசனை மாற்றத்தை தி இந்து ஏற்படுத்தியுள்ளது: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பெருமிதம்

வாசகனை சிந்திக்க வைக்க வேண்டும், அறிவை பரவலாக்க வேண்டும், தமிழ் மக்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய ரசனை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தமிழ் இந்து அதைத்தான் செய்துகொண்டிருக்கிறது என்று எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்தார்.

'தி இந்து' தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வாசகர் திருவிழா தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.

கோவை, புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திண் டுக்கல், தூத்துக்குடி, மதுரையை தொடர்ந்து திருப்பூரில் நேற்று வாசகர் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசியது:

தமிழ் இந்து படிப்பது என்பது தரத்தின் அடையாளம். ஒரு செய்திக்குப் பின்னால் உள்ள உண்மைகளை, என்ன நடந்தது, எப்படி நடந்தது என யோசிக்க வைக்க வேண்டும். வாசகனை சிந்திக்க வைக்க வேண்டும். அறிவை பரவலாக்க வேண்டும், ரசனை மாற்றத்தை உருவாக்க வேண்டும். தமிழ் இந்து அதைத்தான் செய்துகொண்டிருக்கிறது.

'தி இந்து', தமிழ் மக்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய ரசனை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்ச் சமூகத்தில், தமிழ் இந்து மிகப்பெரிய பங்களிப்பாக வாசிப்பின் தரத்தை மேம்படுத்தியுள்ளது.

ஒரு பத்திரிகைக்கு சமூக அக்கறை, பொறுப்புணர்ச்சி இருக்கிறது. நீதி யின் குரலை வெளிப்படுத்துவதாக தொடங்கப்பட்டது ஆங்கில இந்து நாளேடு. அந்த பாரம்பரியத்தில் தொடங்கப்பட்ட பத்திரிகை என்பதால், தமிழ் இந்துவும் நீதியின் பக்கம் நிற்கிறது. எழுத்தாளனை சமூகத்தின் முக்கிய அங்கம் என தமிழ் இந்து நினைத்து அங்கீகரிக்கிறது. தமிழ் கற்பதற்காக இன்று தமிழ் இந்துவை ஏராளமானோர் படிக்கிறார்கள். தொன்மம், குடிநோயாளி, காலத்திரிபு போன்ற பல நல்ல தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்தி புழக்கத்தில் கொண்டு வந்தது தமிழ் இந்து.

ஒரு சொல்லுக்கு, நல்ல தமிழ்ச் சொல்லை தேடுவது, மொழியை வளர்ச்சியடையச் செய்யும் பணியாகும். மொழி வளர்ந்தால் சிந்தனை வளப்படும். அந்த மொழியில், சிந்தனை வளப்பட்டால் அறிவு பரவலாகும். அறிவு பரவலாக்கப் பட்டால், விழிப்புணர்வு உருவாகும். விழிப்புணர்வை உருவாக்கினால், அது சமூகத்தின் சகல துறைகளில் மாற்றத்தை உண்டாக்கும் ஆரம்ப முயற்சியாகும். கிராமப்புற, நகர்ப்புற பள்ளி மாணவர்கள் மத்தியில், வாசகர் வட்டத்தை உருவாக்குங்கள் என முதலாம் ஆண்டு நிறைவு விழாவின் திருப்பூர் கூட்டத்தில், இதையொரு விண்ணப்பமாக வைக்கிறேன். ஆசிரியர்களுக்கு இதைக் கற்றுக் கொடுக்கவும், வழிநடத்தவும் வகை செய்யுங்கள். அதை, தமிழ் இந்து செய்ய வேண்டும். தமிழகத்தில் 100 கிராமங்களை தேர்ந்தெடுத்து, பள்ளிகளில் வாசகர் வட்டத்தை உருவாக்கும் பணியில் 'தி இந்து' களமிறங்க வேண்டும்.

இந்தாண்டு வெளியான 'தி இந்து'வின் தீபாவளி மலர் மிகச் சிறப்பாக இருந்தது. இதுபோன்று குழந்தைகளுக்கான ஒரு மலர் இதுவரை வரவில்லை. அதை 'தி இந்து' செய்ய வேண்டும்.

அநாகரீகம், தரக்குறைவான சொற்கள் எதுவும் தமிழ் இந்துவில் பார்க்கமுடியாது. வாசகர்களை அழைத்து தொடர்ச்சியாக கெளர விக்கும் பண்புக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள் என்றார்.

நிகழ்ச்சியை, 'தி இந்து' குழுமத்தின் பொதுமேலாளர் வி.பாலசுப்பிரமணி யன் தொகுத்து வழங்கினார். 'தி இந்து' நாளிதழ் இணைப்பிதழ்களின் ஆசிரியர் டி.ஐ.அரவிந்தன் ஏற்புரை வழங்கினார். விற்பனை பிரிவு மண்டல மூத்த மேலாளர் (கோவை) பி.சுப்பிரமணியம் நன்றி கூறினார்.

லலிதா ஜூவல்லரி நிறுவனம், ராம்ராஜ் காட்டன் வேஷ்டிகள், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், காஞ்சிபுரம் எஸ்.எம்.சில்க்ஸ் ஆகியன இணைந்து விழாவை நடத்தின. விழாவில், 'தி இந்து' தமிழ் வெளியீடுகளான பொங்கல் மலர், ஆடி மலர், தீபாவளி மலர் மற்றும் 'தி இந்து' ஆங்கில வெளியீடுகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

'விரைவில் புதிய இணைப்பிதழ்'

'தி இந்து' தமிழ் நாளிதழின் ஆசிரியர் கே.அசோகன் பேசியதாவது: 'தி இந்து' தொடங்கி ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி தமிழகம் முழுவதும் இதுவரை 8 நகரங்களில் வாசகர் திருவிழாவை நடத்தியுள்ளோம். அதில் முழுக்க முழுக்க எந்தவிதமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இடம்பெறவில்லை. வாசகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து நடத்தப்பட்டு வருகிறது.

வாசகர்களின் அறிவார்ந்த கருத்துகளை தெரிந்து கொள்ளவும், வாசகர்களுக்கு என்ன பிடிக்கும், எது பிடிக்கவில்லை என்பதை தெளிவாகவும், எந்தவித தயக்கமும் இன்றி ஆணித்தரமாகவும் தெரிவிப்பதற்காகத்தான் மேடை அமைத்துக் கொடுத்துள்ளோம்.

நீண்டகாலமாக செயல்பட்டுவரும் 'தி இந்து', தமிழில் ஒரு தரமான நாளிதழைக் கொண்டு வந்துள்ளது. தரமான, நடுநிலையான செய்திகளை மட்டுமே அளிக்கின்ற பாங்கு, பொதுவாக ஒரு செய்தியில் அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து 'தி இந்து' செய்தி வெளி யிடுகிறது.

நாங்கள் ஒரு புதிய கோணத்தில் பத்திரிகையை நடத்த உள்ளோம். அதில் வாசகர்களின் தேவை, எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செய்திகளைத் தருவதுதான் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க விரைவில் பங்குச் சந்தை, வணிகம், சேமிப்பு, முதலீடு ஆகியவை குறித்து புதிய இணைப்பிதழ் வெளிவர உள்ளன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x