Published : 10 Nov 2014 05:37 PM
Last Updated : 10 Nov 2014 05:37 PM

சமூக அக்கறை வேண்டும்

'தி இந்து' தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வாசகர் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கோவை, புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திண்டுக்கல், தூத்துக்குடியைத் தொடர்ந்து மதுரையில் நேற்று வாசகர் திருவிழா நடைபெற்றது.

மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு விகாசா பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் எவிடென்ஸ் கதிர் பேசியது:

'தி இந்து’வின் வாசகர் திருவிழாவை ஒருவிதமான பந்தத்தை ஏற்படுத்தும் நிகழ் வாகத்தான் பார்க்கிறேன்.

தனி மனிதனின் வலியை, சமூகத்தின் வலியாக மாற்றக் கூடிய வல்லமை 'தி இந்து’வுக்கு மட்டுமே உண்டு. பத்திரிகைகளுக்கு சமூக அக்கறை வேண்டும். மிகத் துணிச்சலாக செய்தி வெளியிடுவது 'தி இந்து'மட்டுமே. எந்தவொரு செய்தியையும் ஆய்வுக் கண்ணோட்டத்தோடு வெளியிடுகின்றனர்.

நடுநிலை என்பது இருதரப்பு கருத்துகளையும் கேட்டு, செய்தி வெளியிடுவது அல்ல. யார் பாதிக்கப்படுகிறார்களோ அவர்கள் பக்கம் நீதி கிடைக்கச் செய்வதுதான் நடுநிலை. 'தி இந்து'நடுப்பக்க கட்டுரைகளில் பல தலைவர்கள் பற்றி, மனதை நெகிழ வைக்கும் பதிவுகள் பற்றி வெளிவருவது சிறப்பானது. மனதை உருக்கும் சம்பவங்களால் அழவும் வைக்கிறார்கள். அநீதியைக் கண்டு எழவும் வைக்கிறார்கள். வீட்டுக்குள் முடங்கி இருக்கும் மக்களை சாலைக்கு வரவழைக்கும் வேலைகளை செய்து சமூக மாற்றத்துக்கு வித்திடுகிறது.

இலக்கியத்தின் மீது பலருக்கு ஈடுபாட்டை ஏற்படுத்தியதும், பலருக்கு தெரியாத இலக்கிய வாதிகளை அறிமுகப்படுத்தியதும் 'தி இந்து’தான். தீண்டாமைக் கொடுமைகள் இன்னமும் தாண்டவ மாடிக் கொண்டிருக்கின்றன. இதுகுறித்து அதிக மான பதிவுகள் வெளியிட வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x