Published : 24 Apr 2017 09:37 AM
Last Updated : 24 Apr 2017 09:37 AM

இன்று நாடெங்கும் கொண்டாடப்படுகிறது பஞ்சாயத்து ராஜ்ஜியம் நாள்!- தமிழகத்தில் புதிய பஞ்சாயத்து அமையாதது ஏன்?

உள்ளாட்சிகளை சட்ட ரீதியாக வலுப் படுத்த இந்திய அரசியல் சாசன 73-வது சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்ட நாள் 1993, ஏப்ரல் 24. அதன் நினைவாக நாடெங்கும் இன்று பஞ்சாயத்து ராஜ் தினம் கொண் டாடப்படுகிறது. அதேசமயம் தமி ழகத்தை பொறுத்தவரை இன்றைய சூழலில் இந்த நாளுடன் வருந்தத் தக்க ஓர் ஒற்றுமையும் இருக்கிறது. ஆம், கடந்த 2016, அக்டோபர் மாதம் 24-ம் தேதியுடன் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில் 6 மாதங் களில் சரியாக இன்றைய நாளில் புதிய பஞ்சாயத்து அரசாங்கம் பதவி ஏற்றிருக்க வேண்டும்.

இந்தியா இனி ஒரு குடியரசு நாடு என 1950-ம் ஆண்டு ஜனவரி 26 அன்று அறிவித்துக்கொண்டது எந்த அளவுக்கு வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்ததோ அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது 1993-ம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று இயற்றப் பட்ட 73-வது சட்டத் திருத்தம். தமி ழகத்தில் கிராமம் தோறும் சென்று பஞ்சாயத்து ராஜ்ஜியம் தொடர்பான விழிப்புணர்வுப் பணிகளை மேற் கொண்டு வரும் நந்தகுமார் இது தொடர்பான தகவல்களை ‘தி இந்து’ வுடன் பகிர்ந்துகொண்டார்.

“1993-ம் ஆண்டு, 73-வது அரசி யல் அமைப்புச் சட்டம் திருத்தப் பட்டபோது புதிய கிராமப் பஞ்சா யத்து அரசுகள் உதயமாயின. அதன்படி மைய அரசு, மாநில அரசுகளைப்போல கிராம மக்க ளுக்கு தன்னாட்சி பெற்ற ஓர் அரசாகப் பஞ்சாயத்து உருவா னது. முடிவுகள் எடுக்கும் அதிகார அமைப்புகளும் அவற்றை அணு குவதற்கான முறைகளும் தலை மையகங்களில் குவிக்கப்பட்டுக் கிடக்கின்றன; எளிய மக்களின் குரல் ஒலிக்க முடியாத தொலை வில் இருக்கின்றன என விமர்சிக் கப்பட்டதன் விளைவு இது. பஞ்சா யத்து ராஜ்ஜியம் உருவான பின்பு அடித்தள மக்களுக்கு வளர்ச்சிப் பணிகளை கொண்டு சேர்ப்பதிலும், அதில் மக்களின் பங்களிப்பைப் பெறுவதிலும் மத்திய மாநில அரசு களுக்கு நடைமுறை சிக்கல்கள் இருப்பது வெட்ட வெளிச்சமானது.

புதிய பஞ்சாயத்து சட்டத்தில், பஞ்சாயத்து அமைப்புகள் தொடர்ந்து செயல்படவும் அவற்றுக் கான தேர்தல்கள் தடையின்றி நடைபெறவும் மாநில தேர்தல் ஆணையங்கள் ஒவ்வொரு மாநிலத் திலும் தனித்தனியாக அமைக்கப் பட்டன. பஞ்சாயத்துகளுக்கு நிதி வசதிகளை கொடுக்க நிதி ஆணையமும் அமைக்கப்பட்டது. கிராமப்புற நிர்வாகத்தில் பெண்கள் மற்றும் பட்டியல் பிரிவினரின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கான இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க வகையில் தற்போது தமிழகத்தில் மகளிருக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

29 துறை அதிகாரங்கள், மாநில தேர்தல் ஆணையம், மகளிர் மற்றும் பட்டியல் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு, நிதி ஆணையம் எனப் பல கூறுகளை இப்புதிய பஞ்சாயத்துகள் பெற்றிருந்தாலும் அவற்றுக்கெல்லாம் மகுடமாக கிராம சபைகள் உள்ளன. ஒரு கிராமத்தில் இருக்கும் வாக்காளர் களைப் பிரதிநிதிகளாகக் கொண்ட மக்கள் சபைதான் கிராம சபை. சட்டசபைக்கு எப்படி சட்டமன்ற உறுப்பினர்களோ, அப்படிதான் கிராம சபைக்கு கிராம மக்கள். கிராம வளர்ச்சியில் மக்கள் பங் கேற்க வேண்டும் என்பதற்காகக் கொண்டுவரப்பட்டவை கிராம சபைகள். கிராமத்தில் நல்ல வாழ்வு அமைய வேண்டும் என்பதற்காக 'வாழும் கிராமங்கள்' என்ற பெயரில் தனது யோசனைகளை முன்வைத்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், கிராமங்கள் வாழ வலுவான கிராம சபைகள் இருக்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தார்.

மூன்று அடுக்குகளாக இருக்கும் பஞ்சாயத்து நிர்வாகத்தில் கிராம பஞ்சாயத்து நிர்வாகத்துக்குக் கட்சி சார்பற்ற தேர்தல் நடைபெறுகிறது. பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர் ஆகிய பொறுப்புகளுக்கு அரசியல் கட்சியின் சின்னத்தில் போட்டியிட இயலாது. இதனால் சாமானியர் கூட கட்சி தயவு இல்லாமல் களம் காணலாம். இயற்கை வளங்களும் விளை நிலங்களும் நீர்நிலைகளும் நிரம்பிய கிராமங்கள் இன்று தொழில்மய தேவைகளுக்காக ஆக்கிரமிக்கப்படுகின்றன. தனி யார் நிறுவனங்கள், மத்திய, மாநில அரசுகளே இதை செய்யத் துணிந்துவிட்டன.

எனவே, உலகமயமாக்கப்பட்ட சூழலில் நமது புதிய பஞ்சாயத்து அரசுகளும் கிராம சபைகளும் மேலும் வலுவாக வேண்டியது அவசியம். சுதந்திரம் பெற்ற 45 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய பஞ்சாயத்துகள் வந்திருப்பதன் மூலம் மத்திய, மாநில அரசுகளின் முழு கட்டுப்பாடு என்ற நிலை மாறி உள்ளூர் மக்களின் கட்டுப்பாட்டில் நம் ஊருக்கான நிர்வாகம் வந்துள்ளது. நெடுவாசல், மீத்தேன் விவகாரம், மதுவிலக்கு, காவிரி டெல்டா விவசாயிகளின் பிரச்சினை என மத்திய, மாநில அரசுகள் எங்கெல்லாம் மக்களை ஒடுக்க நினைக்கிறதோ அங்கெல்லாம் மக்களுக்கான ஆயுதமாக கிடைத்திருப்பதுதான் பஞ்சாயத்து ராஜ்ஜியம்.

இந்த சூழலில் பஞ்சாயத்து ராஜ்ஜியம் நாளாக நாடெங்கும் கொண்டாடப்படும் இதே நாளில் தமிழகத்தில் புதிய பஞ்சாயத்து அரசாங்கம் பதவி ஏற்றிருக்க வேண்டும். ஆனால், அது அமைக்கப்படாதது இந்திய அரசியல் சாசன சட்டத்தை அவமதிக்கும் செயல்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x