Published : 02 Jun 2017 09:44 AM
Last Updated : 02 Jun 2017 09:44 AM

மூத்த பணியாளர்கள் சம்பளத்தை குறைத்துக்கொள்ள முன்வர வேண்டும்: இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி கோரிக்கை

இளம் ஐடி பணியாளர்களை வேலை யில் தக்க வைத்துக்கொள்வதற்காக மூத்த பணியாளர்கள் தாமாக முன்வந்து சம்பளங்களை குறைத்துக்கொள்ள வேண்டும் என இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி கூறினார். தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் இவ் வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

தற்போது இந்த துறையில் இருக்கும் பிரச்சினையை ஐடி துறை பல முறை சந்தித்து இருக் கிறது. இந்த துறையை சேர்ந்த அனைவருக்கும் வேலை இழப்பை சரி செய்ய வேண்டும் என்னும் நல்ல எண்ணம் இருக்கிறது. இந்த துறையில் பல சிறப்பான தலைவர் கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வினை கண்டு பிடிப்பார்கள் என நினைக்கிறேன்.

கடந்த 2001-ம் ஆண்டு இதே போன்ற பிரச்சினை இருந்தது. 2008-ம் ஆண்டும் இதே பிரச்சினை இருந்தது. அதனால் தற்போதைய வேலை இழப்பு பிரச்சினைகள் இந்த துறைக்கு புதிதல்ல. கடந்த காலங்களில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதை போல, தற்போதும் தீர்வு காணப்படும். அதனால் வேலை இழப்பு பிரச் சினையை பெரிய பிரச்சினையாக்க தேவையில்லை.

இது போன்ற பிரச்சினை ஏற்பட்ட சமயங்களில் இன்ஃபோசிஸ் மூத்த பணியாளர்கள் சம்பளத்தை குறைத் துக்கொண்டு இளைஞர்களின் வேலைகளை பாதுகாத்தோம். இதேபோல தற்போதும் மூத்த பணி யாளர்கள் தங்களது சம்பளங்களை சிறிதளவு குறைத்துக்கொள்ளும் பட்சத்தில் இளைஞர்களின் வேலை களை பாதுகாக்க முடியும்.

இயக்குநர் நிலையில் இருப்பவர் கள் அதிக சம்பள குறைப்பையும், துணைத்தலைவர் (விபி) நிலையில் இருப்பவர்கள் கொஞ்சம் குறை வாகவும் சம்பளத்தை குறைத்துக் கொண்டனர்.

கடந்த 2001-ம் ஆண்டு இன்ஃபோ சிஸில் நாங்கள் இந்த முடிவினை எடுத்தோம். நிர்வாக குழு கூடி, இளைஞர்களின் வேலையை பாதுகாக்க மூத்த தலைவர்களின் சம்பளத்தை குறைத்துக்கொள்ள முடிவெடுத்தாம்.

அந்த சமயத்தில் பல நிறுவனங் கள், புதிய பணியாளர்களுக்கு கொடுத்த வேலை வாய்ப்புகளை தள்ளிப்போட்டனர். ஆனால் நாங் கள் சம்பளத்தை குறைத்துக்கொண் டதால், ஏற்கெனவே வாக்குறுதி அளித்தபடி 1,500 நபர்களை குறிப்பிட்ட காலத்துக்குள் பணிக்கு எடுத்தோம்.

நிறுவனங்கள் புதிய வாய்ப்பு களை கண்டறிந்து, அந்த தொழில் நுட்பத்தில் போதுமான பயற்சிகள் அளிக்க வேண்டும். ஒரு ஆண்டு காலம் வாய்ப்பு கொடுத்த பிறகு சரி யாக பணியாற்றவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி யோசிக்கலாம்.

அதைவிட்டுவிட்டு உடனடியாக ஒருவரை வீட்டுக்கு அனுப்புவது சரியல்ல. அவர்களை நம்பி குடும் பங்கள் உள்ளன. தற்போது இந்த துறையின் தலைவர்களாக இருப் பவர்கள் தற்போதைய பிரச்சி னைக்கு தீர்வு காண வேண்டும் என நாராயணமூர்த்தி கூறினார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x